‘பணம் கேட்டா தரமாட்டியா?’... ‘ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்’... 'தாய்க்கு நேர்ந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பணம் கேட்டு தராததால், பெற்ற தாயையே மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காசிபாளையம் - மணியக்காரம்பாளையம் சாலையை சேர்ந்தவர் 47 வயதான ஆரோக்யமேரி. கணவர் இறந்துவிட்டநிலையில், அவரது பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை எடுத்து நடத்தி வந்தார் ஆரோக்யமேரி. முதல் மகளுக்கு திருமணமாகியுள்ள நிலையில், அவர் வெளியூரில் உள்ளார். இரண்டாவது மகள் தனியார் நிறுவனத்தில், கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது 22 வயதான மகன் ஹர்சித் உடன் வசித்து வந்தார் ஆரோக்யமேரி.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று, வீட்டின் கீழ்தளத்தில் இயங்கி வரும் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல்தளத்தில் தங்கியிருந்த ஆரோக்யமேரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அனைவரும் ஓடிச் சென்று பார்த்தபோது, வயிறு மற்றும் நெஞ்சில், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஆரோக்யமேரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரது மகன் ஹர்சித் வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். இதனைப் பார்த்த பணியாளர்கள் உடனடியாக ஆரோக்யமேரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஹர்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஹர்சித் வேலைக்கு செல்லாமல் இருப்பதும், பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரம் முற்றிய நிலையில் தாயை கொன்றதும் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

MOTHER, SON, TIRUPUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்