சுனாமி, வெள்ளம், புயல் மட்டுமில்ல... கொரோனாவையும் 'அசால்ட்டா' டீல் செய்யும் சென்னை... உண்மையிலேயே இது 'ஸ்வீட்' நியூஸ் தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது.

இந்தியளவில் கொரோனா வெகுவேகமாக பரவ ஆரம்பித்த நகரங்களில் சென்னையும் ஒன்று. மும்பைக்கு அடுத்த இடத்தில் இருந்ததால் பிற மாவட்ட மக்கள் வீடுகளை காலி செய்து சென்னையை விட்டு புறப்பட்டு சென்றனர். இதனால் நகரம் வேகமாக காலியானது. எனினும் சுனாமி, வெள்ளம், புயல் என எத்தனையோ இடர்ப்பாடுகளை பார்த்து மீண்டெழுந்த சென்னை இந்த முறையும் கொரோனாவில் இருந்து மீண்டெழும் என மக்கள் நம்பிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் மக்களின் நம்பிக்கை, அரசின் துரித நடவடிக்கைகள், தன்னார்வலர்களின் தொண்டு போன்ற பல்வேறு காரணங்களால் சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து 70% அதிகமாக மீண்டு விட்டது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 82 ஆயிரத்து 128 பேரில் இதுவரை 65 ஆயிரத்து 748 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் தற்போது சிகிச்சையில் 15,038 பேர் மட்டுமே இருக்கின்றனர்.

விரைவில் அவர்களும் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பின் சென்னை கொரோனா பிடியில் இருந்து மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் சென்னை தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கொரோனா காரணமாக உயிரிழந்த எண்ணிக்கை 1341 ஆக உள்ளது.

மண்டலம் வாரியாக சிகிச்சை பெற்று வருவோர்  விவரம் வருமாறு:-

1.திருவொற்றியூா் - 616
2.மணலி - 209
3.மாதவரம் - 419
4.தண்டையார்பேட்டை - 848
5.ராயபுரம் - 1141
6.திருவிக நகா் - 1039
7.அம்பத்தூா் - 927
8.அண்ணா நகா் - 1553
9.தேனாம்பேட்டை - 1432
10.கோடம்பாக்கம் - 2077
11.வளசரவாக்கம் - 744
12.ஆலந்தூா் - 476
13.அடையாறு - 1017
14.பெருங்குடி - 331
15.சோழிங்கநல்லூா் - 377

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்