வாலிபரிடம் இருந்து 'இரண்டரை' லட்சம்... ஆபாச 'வீடியோக்கள்' பறிமுதல்... கைது 'வேட்டை' தொடரும்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் இன்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிறார் ஆபாச வீடியோக்கள் வேட்டைக்கான பிள்ளையார் சுழி தென் கொரியா நாட்டில் இருந்து தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டு தென் கொரிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆபாச வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சர்வர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சிறுவர், சிறுமிகளின் இரண்டரை லட்சம் ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்வேறு நாடுகளில் இருந்தும் இளைஞர்கள் இணையதளம் வழியாக தொடர்புகொண்டு அந்த இளைஞரிடம் இருந்து வீடியோக்களை வாங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்தே அனைத்து நாடுகளின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழக காவல்துறைக்கு மத்திய அரசு தகவல் அளித்தது. சிறுவர்கள் ஆபாச படங்கள் பார்ப்பதில் தமிழகம் குறிப்பாக சென்னை முதலிடத்தில் இருக்கும் விவரமும் இதற்கு அடுத்தே தெரியவந்தது. தற்போது 6500 பேரின் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதும் 1,500 பேர் இது போன்று குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்து பரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக திருச்சியில் ஒருவரை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தமிழகத்தின் பிற நகரங்களிலும் இந்த கைது வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தியேட்டருக்குப் போன 5 மாத கர்ப்பிணி’.. ‘காரில் கடத்திய 4 பேர் கொண்ட கும்பல்’! அடுத்து நடந்த கொடுமை..!
- 'IP Address மூலம் அடுத்த லிஸ்ட்'.. ‘திருச்சியை அடுத்து 3 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டியல்’.. விசாரணை தீவிரம்..!
- உங்க 'அப்பாவுக்கு' அடிபட்டுருச்சு... 6-ம் வகுப்பு மாணவியை... 'ஏமாற்றி' அழைத்துச்சென்ற வாலிபர்... எப்படி சிக்கினார் தெரியுமா?
- மொத்தம் 11... ஆனால் 'இறந்தவர்களின்' உடலில்... எந்தவொரு 'புல்லட்டும்' இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை!
- நடந்த 'உண்மை' மக்களுக்கு தெரிய வேண்டும்... 'என்கவுண்டர்' விவகாரத்தில்... 'தெலுங்கானா' அரசு தலையிடக் கூடாது!
- விபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..
- 'மகளின் தகாத புகைப்படங்களை அனுப்பி 30 நண்பர்களை வரவழைத்த தந்தை'.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
- 'நாங்க உங்க இன்ஸ்டாகிராம் ஃபேன்ஸ்'.. 22 வயது இளைஞரின் ஃபோட்டோவை பார்த்ததும், நேரில் வந்து பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்!
- 'செல்பி' மோகத்தால்... இளைஞருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 2-வது நாளாக உடலைத்தேடும் போலீசார்!
- VIDEO: லாரியில் கொண்டு செல்லப்பட்ட தெலுங்கானா பெண் மருத்துவர்..! வெளியான புதிய சிசிடிவி வீடியோ..!