வீட்டுக்குள்ள 'ஒரு விஷயம்' புதைஞ்சு இருக்கு.. 'அத' எடுத்தா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுக்குள் இருக்கும் தங்க புதையலை எடுத்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்படுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தளி அருகே திப்பென அக்ரஹாரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் சாந்தாம்மா. கடந்த சில மாதங்களாகவே சாந்தம்மா வீட்டில் பல பிரச்னைகள் ஒன்று போனால் மற்றொன்று என வந்து கொண்டிருந்துள்ளது.
பூஜை செய்தால் சரி ஆகி விடும்:
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட சாந்தாம்மா தனக்கு தெரிந்தவர் மூலம் வீட்டில் பூஜை செய்தால் சரியாகி விடும் என நினைத்து ஒருவரை அணுகியுள்ளார். மேலும், சாந்தாம்மா வீட்டில் பூஜை செய்வதாகக் கூறி, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் அங்கு சென்றுள்ளனர்.
தங்கசிலை உள்ளது:
இந்நிலையில் சாந்தாம்மா அவர்களின் வீட்டில் தங்கச்சிலை இருப்பதாகவும் அது வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் பல பிரச்சனைகளை உங்களுக்கு கொடுத்துள்ளார் எனவும் இஷ்டத்திற்கு கதை அளந்து விட்டுள்ளனர் அந்த மர்ம நபர்கள்.
சும்மா இருந்த சாந்தாம்மாவும் தங்க சிலை கிடைக்கும் என்ற ஆசையில் வீட்டை தோண்ட ஒத்துகொண்டுள்ளார். மேலும் வீட்டை தோண்ட சுமார், 55 ஆயிரம் ரூபாய் ஆகும் என கூறி அந்த பணத்தை வாங்கியுள்ளனர்.
வீட்டின் நடுவே பள்ளம்:
பணத்தை வசூலித்த அந்தக் கும்பல், பூஜைகள் செய்து தோண்டத் தொடங்கியுள்ளது. பாதி தோண்டிய பின் மேலும் 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். இல்லையென்றால் அப்படியே விட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
அதோடு சாந்தாம்மா வீட்டுக்குள்ளிருந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், அக்கம்பக்கத்தினர் தளி காவல்துறையினரை வரவழைத்தனர். விசாரணையில் அவர்கள் மோசடி கும்பல் என்பது உறுதியானதால், 5 பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தண்ணீர்த் தொட்டிக்குள் கோடி கோடியாக பணம்... ஐடி ரெய்டில் சிக்கிய தொழிலதிபர்!
- புதுசா வீடு கட்ட போறீங்களா.. மணல் விற்பனைக்கு.. அரசு வெளியிட்ட சூப்பர் விதிமுறைகள்
- முதலிரவுக்காக காத்திருந்த புது மாப்பிள்ளை.. 'அந்த நேரத்தில்' மணப்பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- இதுக்கு முன்னாடி இப்படி கேள்விப்பட்டதே இல்ல.. சென்னையில் நடந்த நூதன கொள்ளை.. மிரள வைக்கும் பின்னணி..!
- முதலமைச்சர் அப்பாவை விட 5 மடங்கு செல்வச் செழிப்பான மகன்..!- வெளியிடப்பட்ட சொத்து விவரம்
- ஐயா.. என் வீட்டை காணோம்யா! பழையபடி ஊரில் வந்து வாழலாம் என கிளம்பி வந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி
- வெளிநாட்டுல கஷ்டப்பட்டே 'வாழ்க்கை' போயிடும்னு நெனச்சேன்! கட்டடத் தொழிலாளிக்கு 'கூரையை' பிய்த்துக்கொண்டு விழுந்த அதிர்ஷ்டம்
- 'தவறுதலா பணம் அனுப்பிட்டோம்'- 2 ஆயிரம் பேருக்கு 1,310 கோடி ரூபாயை அனுப்பிய வங்கி..!
- வங்கி ஏடிஎம் கட்டணம் உயர்ந்தது! லிமிட்-க்கு மேல் எடுத்தாச்சுன்னா எவ்வளவு பிடிப்பாங்க?
- ஏடிஎம்-ல் பணம் எடுக்க உதவி செய்வதாக நம்ப வைத்து.. சின்ன கேப்பில் பெரிய மோசடி செய்த இளைஞர்கள்!