குப்பை மேட்டில் கொட்டிக்கிடந்த பணம்.. ஒரு குவாட்டர் பாட்டிலும், கால்குலேட்டரும் எக்ஸ்ட்ரா... எப்படி இவ்ளோ பணம் இங்க வந்துச்சு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை: தேவையில்லாத குப்பைகள் மற்றும் பணத்திற்கு இடையே ரூபாய் நோட்டுகள் கிடந்தது கோவைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அனைவராலும் மதிக்கக்கூடிய பணம்:

பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்று கூறுவது உண்டு. இன்றைய பொருளாதார நெருக்கடியில் மனிதர்கள் பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என ஓடுகிறார்கள். பலர் நேர்மையான வழியில் பணம் சம்பாதித்தாலும் ஒருசிலர் திருட்டுத் தனமாக, இன்னொருவர் உழைப்பை சுரண்டி பணம் சம்பாதிப்பதும் நடக்க தான் செய்கிறது. பணத்திற்காக உறவு பிரிகிறது. பணத்திற்காக தற்கொலை, கொலை நடக்கிறது, திருமணம் தடைபடுகிறது.

உணவில்லாமல் மக்கள் சிரமப் படுகிறார்கள். உடுக்க நல்லத் துணி இல்லாதவர்களும் உண்டு. பணத்தை மையமாகக் கொண்டு பூமி இயங்குகிறது. அப்படி அனைவராலும் மதிக்கக்கூடிய பணத்தை யாருமே குப்பையில் போட மாட்டார்கள். அப்படி யாராவது தெரியாமல் போட்டால், அது மிகப் பெரிய செய்தியாகி விடுகிறது.

73-வது குடியரசு தினம்:

இப்படியிருக்க, நாட்டின் 73-வது குடியரசு தினம் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்றைய தினம் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

குப்பை மேட்டில் வைத்து சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை:

ஆயினும், கோவை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. விடுமுறை என்றாலும் டாஸ்மாக் பக்கத்தில் வைத்து திருட்டுத் தனமாக விற்பது நிறைய இடங்களில் வாடிக்கையான ஒன்று. எந்த டாஸ்மாக்கில் சென்றால் சரக்கு கிடைக்கும் என்பது குடிமகன்கள் நன்றாகவே அறிந்து வைத்திருப்பார்கள்.  இந்த நிலையில் நேற்றைய தினம் சூலூர் கலங்கல் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகில், குப்பை மேட்டில் வைத்து சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு:

அப்போது விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களுடன் அட்டைப்பெட்டியில்  ரூபாய் நோட்டுகளையும், கால்குலேட்டரையும் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளுடன் பணம் மற்றும் மதுபாட்டில்கள் கேட்பாரற்று கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை, MONEY, TRASH, COIMBATORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்