'ட்ரில் போடுறது.. முகமூடி.. ப்ளானிங்னு'.. 'அந்த க்ரைம் சீரிஸ்தான் என் பாஸுக்கு இன்ஸ்பிரேஷனே'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

லா காசா டி பேபல் என்கிற ஸ்பானிஷ் பெயரில், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும் க்ரைம் தொடர்தான் மணி ஹீஸ்ட். இந்த சீரிஸைப் பார்த்துதான் லலிதா ஜீவல்லரிக்குள் நகையைத் திருடும் ஐடியா தனது பாஸ் திருவாரூர் முருகனுக்கு கிடைத்ததாக, போலீஸாரிட பிடிபட்டுள்ள மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்னில் உள்ள மத்திய வங்கியைக் கொள்ளையடிக்க கும்பலாகக் கூடி திட்டமிடுவதும், கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றுவதுமான காட்சிகளை உள்ளடக்கியது மணி ஹீஸ்ட் சீரிஸ். இதில் வரும் முக்கியமான பேராசிரியர் கதாபாத்திரத்தைப் போலவே, திருவாரூர் முருகன் வேனிலேயே தனது வாழ்க்கையைக் கழித்து வருவதாகவும், அவர் இந்த சீரிஸினை தொடர்ந்து பார்த்து இன்ஸ்பையர் ஆனவர் என்றும் பிடிபட்ட மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

‘சுவரில் துளையிட்டு கொள்ளைச் சமபவத்தை செய்யும் திறனுடைய திருவாரூர் முருகன்தான் எங்களுக்கெல்லாம் பாஸ்’ என்று குறிப்பிட்டுள்ள மணிகண்டன், தற்போது முருகன் நடமாட முடியாத சூழலில் வேனிலேயே தன் வாழ்க்கையைக் கழித்து வருவதாகக் கூறியதை அடுத்து, அவரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மணி ஹீஸ்ட் தொடரில் வரும் ப்ரொஃபசர் தொடங்கி, கொள்ளையர்கள் அணியும் ஆடைகள், முகமூடி, சுவரில் துளையிடும் உத்தி உள்ளிட்ட பல சம்பவங்கள், நடந்து முடிந்த திருச்சி லலிதா ஜீவல்லரி நகைக்கொள்ளைச் சம்பவத்துடன் ஒத்துப்போவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ROBBERY, LALITHAAJEWELLERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்