'அம்மா உன்ன விட்டுற மாட்டேன்'...'தாய்க்காக மகள் எடுத்த ரிஸ்க்'...நெஞ்சை உலுக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாயை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என போராடிய மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு மண்ணொளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுணா. இவரது கணவர் ஜென்சிராமன் ஏற்கனவே இறந்து விட, மகன் கமலக்கண்ணன் மற்றும் மகள் ரோஜா ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் எருமை மாடுகளை வளர்த்து வந்த நிலையில், அவற்றை தினமும் ஏரிக்கு அருகே கூட்டி சென்று மேய்ப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல மாடுகளை அங்கிருந்த திருநின்றவூர் ஏரிக்கு அருகே கூட்டி சென்று மேய்த்து கொண்டிருந்தார்கள்.
இதனிடையே அங்கிருந்த மாடுகள் ஏரிக்குள் இறங்க, அவற்றை மேல கொண்டு வருவதற்காக சுகுணா ஏரியில் இறங்கினார். அப்போது ஏரியில் இருந்த சேற்றில் அவர் எதிர்பாராத விதமாக சிக்கி கொண்டார். தாய் சேற்றில் சிக்கி கொண்டதை பார்த்த மகள் ரோஜா அதிர்ந்து போனார். இதையடுத்து தாயை காப்பாற்ற அவரும் ஏரிக்குள் இறங்கினார். அவர் எவ்வளவு முயன்றும் அவரது தாயை காப்பாற்ற முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் மகள் ரோஜாவும் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். ஆனால் நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாமல் மகன் கமலக்கண்ணன் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து இரவு வந்து பார்த்தபோது தாயும், தங்கையும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியுள்ளார். காலையில், ஏரியின் அருகே சென்று பார்த்த போது 2 சடலங்கள் மிதந்து வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே தந்தையை இழந்த கமலக்கண்ணன், தற்போது தாயையும், தங்கையையும் பறிகொடுத்து விட்டு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குடும்பத்துடன் கோயிலுக்கு போனபோது’... ‘நொடியில் நடந்த கோர சம்பவம்’!
- ‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..
- 'நொடியில் நடந்த கோர விபத்து!'.. 'பள்ளத்தாக்கில் விழுந்த பயணிகள் வாகனம்'.. 16 பேர் பலியான சோகம்!
- ‘நொடிப்பொழுதில்’.. ‘2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்’.. ‘16 பேர் பலி; 60 பேர் காயம்’..
- ‘மதுபோதையில் காரை ஓட்டிவந்த இன்ஜினியரால் கோர விபத்து’.. ‘செல்ஃபி எடுத்த இளைஞர்களுக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்..
- 'பின்னால் வந்த லாரி'...'திடீரென போட்ட சடன் பிரேக்'... கனநொடியில் நேர்ந்த பயங்கரம்!
- ‘ஓடும் ரயிலில்’.. ‘சிறுமிகளுடன் வந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- ‘அசந்த நேரத்தில்’.. ‘தந்தையின் பைக்கை இயக்கிய சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..
- ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’! ‘பறிபோன 2 வயது குழந்தை உயிர்’!.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- ‘உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு’... ‘போய்விட்டு திரும்பியபோது’... 'புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்’!