'வேட்டி.. வேட்டி... வேட்டிக்கட்டு'.. மாமல்லபுரத்துக்கு வந்த சீன அதிபரை வரவேற்க, பிரதமர் மோடியின் 'புது கெட்டப்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கக் கூடிய வரலாற்று சந்திப்பு, இன்று சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நிகழ்கிறது. 

இதற்கென சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர், அங்கிருந்து சொகுசு கார் மூலமாக சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் அங்கிருந்து மாமல்லபுரத்தில் 20 வாகனங்களில் முன்னும் பின்னும் சென்ற பாதுகாப்பு படை வீரர்களுடன் புறப்பட்டார்.

இந்நிலையில், சீன அதிபரை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையில் கோவளத்தில் இருந்து பிரதமர் மோடி மாமல்லபுரம் வந்தடைந்ததும், சீன அதிபரை வரவேற்றதும், அவருக்கு மாமல்லபுரத்தின் சிற்பக்கலைகள் குறித்து, தமிழ், சீன மொழி, ஆங்கில மொழி தெரிந்த இளைஞர் ஒருவரின் உதவியுடன் சீன அதிபருக்கு மோடி விளக்கிக் கூறுவது, ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து இளநீர் குடித்ததுமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

மேலும், பாதுகாவலர்கள் சற்று தூரமிருக்க, மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரம் மலைக்குன்றுகள் மீது நின்று பேசிக்கொண்டிருந்ததும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. 

NARENDRAMODI, MODIXIJINPINGMEET, MAMALLAPURAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்