இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் பாரதப் பிரதமர் மோடி!.. பிரபல தமிழக பல்கலைக்கழகத்தில் விழா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல தமிழக பல்கலைக்கழகத்தில் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்குகிறார்.

Advertising
>
Advertising

Also Read | "என் செல்போனை ஒட்டுக்கேக்குறாங்க".. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு.. முழு விவரம்..!

'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரபலமான இளையராஜா திரையுலகில் சாதித்தவை ஏராளம். தனது இசையின் மூலமாக உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இளையராஜா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ளார்.

இளையராஜாவை இந்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான  பத்ம விபூஷன் விருதும் 2018-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. இதுவரையில் 1000 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ள இளையராஜாவை அவரது ரசிகர்கள் ராகதேவன் என்றும், இசைஞானி என்றும் கொண்டாடி வருகிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா இசையமைத்த பாடல்கள், இன்றைய காலகட்டத்திலும் ஏராளமான இசை ரசிகர்களின் பிளே லிஸ்ட்டை ஆக்கிரமித்து அவர்களை மதி மயக்கச் செய்யும் வகையிலும் இருந்து வருகிறது.

இளையராஜா, கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன உறுப்பினராக ஒன்றிய அரசு மூலம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி    நாளை வெள்ளிக்கிழமை திண்டுக்கல் வருகிறார்.

பல்கலைக்கழகத்தில் 2018, 19 மற்றும் 2019 -20 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி பட்டத்தையும் பிரதமர் மோடி வழங்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "டவுட்டே இல்ல, இவரு தான், ஆனா".. தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் விஷயத்தில் டிவில்லியர்ஸ் சொன்ன பதில்!!

NARENDRAMODI, MODI, GANDHIGRAM UNIVERSITY, ILAIYARAAJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்