10 ரூபாய்க்கு 4.. விரைவில் கலக்கப் போகும் 'மோடி இட்லி!'.. வைரல் போஸ்டர்.. எங்க தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒன்று சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், விரைவில் சேலத்து தாமரை நாயகன் மகேஷ் வழங்கும் மோடி இட்லி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில், 10 ரூபாய்க்கு 4 இட்லி சாம்பாருடன் வழங்கப்படும் என்றும், அதி நவீன கருவிகள் மற்றும் சுகாதாரமானது, ஆரோக்கியமானது, சுவையானது, தரமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் பாஜக பிரச்சார அணியின் மாநில துணைத்தலைவர் மகேஷ் பெயரில், சேலம் டவுன்,  சின்ன கடை வீதி, பழைய பேருந்து நிலையம் ,புதிய பேருந்து நிலையம், செவ்வாய்பேட்டை, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்