உங்களுக்கு நியாபகம் இருக்கா...? '1989 மார்ச் 25-ல என்ன நடந்துச்சுன்னு...' இப்போ முதல்வரோட அம்மாவையே 'இப்படி' பேசியிருக்காங்க...! - பிரதமர் மோடி கண்டனம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2021ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.

                                  

அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

                        

வாக்கு சேகரித்து, மேடைக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மற்றும் ஆ.ராசா அவர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

                         

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, 'நம்முடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஆனால் காங்கிரஸ், தி.மு.கவோ வாரிசு அரசியலை நோக்கமாகக் கொண்டது.\

                         

காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகளின் தாக்குதல் பெரும்பாலும் பெண்கள் மீது நடைபெறுகிறது. இப்போது நான், அநீதிக்கு எதிராக எந்த சமரசமும் செய்யாத சகோதர, சகோதரிகளின் நிலத்தில் இருக்கிறேன்.

                              

தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், அவர்களின் கட்சித் தலைவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

                     

நாங்கள், பெண்களை அவதூறாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சியின் வரலாற்றை எடுத்து பார்த்தால், அவர்கள் முன்பே இப்படி தான் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தமிழக முதல்வரின் மரியாதைக்குரிய அம்மா குறித்து அவதூறாக பேசியுள்ளனர்.

இனியும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அனைத்து பெண்களையும் அவதூறாக பேசுவார்கள். பெண்களை இழிவாக பேசுவது காங்கிரஸ், தி.மு.கவின் கலாச்சாரமாக இருப்பது வருந்தத்தக்கது.

திமுக கட்சியின் சார்பாக இருக்கும் திண்டுக்கல் லியோனியும், கடந்த சில தினங்களுக்கு முன்னர்  பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளார். தி.மு.க தலைமை அதனைக் கண்டிக்கவில்லை.

உங்களுக்கு நினைவுள்ளாத 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர்கள், ஜெயலலிதாவிடம் நடந்து கொண்ட விதமே போதும். பெண்களை இழிவாக நடத்துகிறவர்களும் பேசுகிறவர்களும் பெண்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியாது. அவர்களுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீண்டும் அதிகரிக்கும்' எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்