சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை திருடர்கள் வெட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியைச் சேர்ந்தவர் கீதா. இவர் கொடுங்கையூர் முத்துக்குமாரசாமி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரி விட்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த கீதாவை, இரு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
அந்த மாணவி எஸ்.ஏ. காலனி எட்டாவது தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் இருவரும் செல்போனை பறிக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது அந்த மாணவி செல்போனை தர மறுத்ததால், கத்தியால் அவரை சரமாரியாக திருடர்கள் வெட்டியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள எம்.கே.பி. நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாணவி அளித்த புகாரின் உண்மை தன்மைக் குறித்து விசாரணை செய்ய, செல்போன் பறிப்பு நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை... பயிற்சியாளரின் மகன் கைது...!
- ‘நீங்கதான் பர்த்டே பேபியா.. கொஞ்சம் பீச் பக்கம் வாங்க’.. கலக்கிய கான்ஸ்டபிள்.. குவியும் பாராட்டுக்கள்!
- ‘சென்னையில் பைக்கை சரமாரியாக அடித்து நொறுக்கிய காவலர்’.. அதிர வைக்கும் காரணம்.. வைரலாகும் வீடியோ!
- முன்பைவிட ‘இன்னும் அதிகாலையிலேயே’.. மாறிய மெட்ரோ ரயில் நேரம்.. உற்சாகத்தில் சென்னைவாசிகள்!
- மண்புழுவா.. குமாரசாமியா.. எடியூரப்பாவா..? - வைரலான பள்ளி வினாத்தாள்!
- ‘மெர்சல் பட பாணியில் 2 ரூபாய் டாக்டர்’.. இறப்புக்கு பின் தொடரும் நெகிழ்ச்சிகரமான சம்பவம்!
- 'ஓடும் காரில் 'கால் டாக்ஸி' டிரைவருக்கு நிகழ்ந்த கொடூரம்'...சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
- ‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ!
- ஹோலி பண்டிகையில் விபரீதம்: முதலுதவி செய்து காப்பாற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!
- ‘10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’.. ‘வீடியோவை வெளியிட்ட ஆட்டோ டிரைவர்’.. கண்ணீருடன் மாணவி கதறல்!