‘திடீரென தீப்பற்றி எரிந்த வீடு’!.. விசாரணையில் தெரியவந்த ‘பகீர்’ காரணம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்ததால் குடிசை வீடு எரிந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த பல்லாவரம் பம்மல் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பால தேசிங்கு ராஜா. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக குடிசை வீடு ஒன்று இருந்துள்ளது. இதனை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், ஒரு இளைஞர் மட்டும் வெளியே குளித்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது திடீரென குடிசை தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பற்றி எரிந்ததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள், வீட்டிலிருந்த துணி, பணமெல்லாம் எரிந்து சாம்பலாகின.
இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீட்டில் இருந்த செல்போன் சார்ஜர் வெடித்ததில் குடிசை தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரொம்ப நேரமா ஒரே இடத்துல கிடந்த பை...' 'டக்குனு மின்னல் வேகத்தில் மறைந்த ஒரு மர்ம நபர்...' - அதிர்ச்சியடைந்த மக்கள்...!
- 'எவ்ளோ கம்மியா இருந்துச்சு...' 'இப்போ நாளுக்கு நாள் எகிறிட்டே போகுது...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரம்...!
- சென்னையில் மீண்டும் ஊரடங்கா...? - விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர்...!
- ‘இளைஞரால் கிடைத்த மறுவாழ்வு’!.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெண்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி..!
- தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்...!
- பாய்ச்சல் எடுக்கும் கொரோனா... நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் எண்ணிக்கை... மக்களே, இனிமே தான் நாம உஷாரா இருக்கனும்! - முழு விவரம் உள்ளே!
- ‘ஏதோ உருவம் தெரியுர மாதிரி இருக்கே’!.. நள்ளிரவு ‘கூவம்’ ஆற்றில் வந்த சத்தம்.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன குடும்பம்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி..!
- 'இனிமேல் தான் மக்கள் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்...' - சென்னையில் சத்தமில்லாம எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!
- “மக்கள் அலர்ட்’டாக இருக்க வேண்டிய நேரம்...” - சென்னையில் சத்தமில்லாம எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!
- ‘ரகசிய தகவல்’!.. பொம்மைக்குள் ஒளித்து வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி.. சென்னை தனியார் பார்சல் கம்பெனியில் அதிரடி சோதனை..!