"இந்த அரசு இத பின்பற்றல... அதன் விளைவுதான் இந்த இரட்டைக்கொலை!"... தோண்டி எடுத்த மக்கள் நீதி மய்யம்! பரபரப்பை கிளப்பிய அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை:
சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்தது.
அம்மனுவானது தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் 2013-ன் படி நிறுவப்பட்டுள்ள காவல்துறை புகார் ஆணையத்தின் அமைப்பு எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சட்டம் முறையானதாக இல்லை என்றும் நடைமுறைத் தன்மைக்கு போதுமானதாக இல்லை என்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு புறம்பானதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி காவல்துறை புகார் ஆணையமானது மாநில தலைமை ஆணையர் மற்றும் மாவட்ட வாரியான ஆணையங்களாக அமைக்கப்பட வேண்டும்.
மாநில தலைமை ஆணையத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளையோ அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளையோ பணியமர்த்த வேண்டும் என்றும், மாவட்ட வாரியான ஆணையங்களில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற காவலர் அல்லாத அரசு ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் இருக்கும் பட்சத்தில், இந்த அரசு அவ்வழிகாட்டுதலுக்கு மாறாக செயல்பட்டதன் விளைவு இந்த இரட்டை படுகொலை சம்பவம்.
இந்த அரசு ஆணையங்கள் அமைத்து அதில் காவல் அதிகாரிகளையே நிர்வாகிகளாக பணியமர்த்தி உள்ளதுதான் இதன் தோல்விக்கு காரணம். அதுமட்டுமன்றி இவ்வாறு செய்தது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், அதன் சரத்துக்களுக்கும் எதிரானதாக உள்ளது. அதனாலேயே மக்கள் நீதி மய்யம் இந்த அரசின் மெத்தனப் போக்கை எதிர்த்து மேற்கண்ட சட்டத்தை திருத்தி ஆணை அமைப்பை மாற்றி அமைக்க நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட நேர்ந்துள்ளது” என்று மக்கள் நீதி மையத்தின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மதுரையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு...' எந்த தேதி வரை...? - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு...!
- “சாதாரண குடும்பத்துல இருந்து வந்தேன்.. இப்டி ஆகும்னு நெனைக்கல! எதிர்காலத்த நெனைச்சாதான்”.. கதறி அழும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன்!
- ”இப்படித்தான், என் மகனையும் அடிச்சே கொலை செஞ்சாங்கய்யா...!” .. எஸ்.ஐ. ரகு கணேஷின் ’அதிர்ச்சி’ பின்னணி - மகனை இழந்து கதறும் தாய்!
- சிபிசிஐடி அதிரடி: ‘காவலர் முத்துராஜ்’ தேடப்படும் நபராக அறிவிப்பு! - சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் அடுத்த திருப்பம்!
- விஷ வாயு தாக்கி 4 பேர் பலி - தூத்துக்குடியில் நடந்த சோக சம்பவம்!
- ‘சாத்தான்குளத்தில்’ நள்ளிரவு ’அதிரடி’: தப்பியோடிய காவல் அதிகாரிகளை CBCID வளைத்துப்பிடித்தது எப்படி? - நொடிக்கு நொடி ஏற்பட்ட திருப்பங்கள்!
- VIDEO: ரகு கணேஷை தொடர்ந்து, அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் - ஒரே இரவில் CBCID அதிரடி!
- ”வளர்ச்சிய விட மனித உயிர்தான் முக்கியம்!” - நெய்வேலி பாய்லர் விபத்து சம்பவத்தில் கமல் ஆவேசம்!
- “மாண்புமிகு நீதிபதிகள்.. காவலர் ரேவதி... நம்பிக்கை தந்துருக்கீங்க!”... 2 வருஷத்துக்கு பின், சாத்தான்குளம் விவகாரத்தில் வெற்றிமாறன் ட்வீட் !
- “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுங்குறான்...” - நீதிபதியவே இப்டி மிரட்றான்னா...? அந்த பெண் காவலரை...?? - ’சாத்தான்குளம் போலீசை’ திட்டி தீர்த்த வழக்கறிஞரின் அதிரடி பேட்டி!