முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் கமல் நெகிழ்ச்சி வாழ்த்து. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல்வர் முக. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கிரிக்கெட் பிதாமகன் சச்சினுக்கு புதிய கவுரவம்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. முழு விபரம்..!
முதல்வர் மு க ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கியுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த கண்காட்சியை திறந்துவைக்க மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து சிறப்பு அழைப்பிதழை கொடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது பேசிய அவர் "கருணாநிதியின் மகன் ஸ்டாலின் என அவர் அறிமுகமானதிலிருந்து நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும் நண்பர்களாகவே இருந்து வருகிறோம். எங்களுடைய நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் உணர்த்தி இருக்கின்றோம். மாபெரும் தலைவரின் மகன் என்பதில் எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அதே அளவு சவால்களும் உண்டு. அதையெல்லாம் ஏற்று படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
சாதாரண தொண்டராக தொடங்கி இளைஞரணிச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல் அமைச்சராக தற்போது முதலமைச்சராக என படிப்படியாக அவர் வளர்ந்து வந்திருக்கிறார். அவரின் பொறுமையை மட்டும் அல்ல திறமையும் நிரூபித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார். சரித்திரத்தை அடிக்கடி நினைவு கூற வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால் சரித்திரத்தை மாற்றி எழுத குறிப்பாக தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இது போன்ற நல்ல சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவு படுத்த வேண்டும். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி" என தெரிவித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், இன்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில்,"முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | "ஒவ்வொரு நாளும் இதை மறந்துடாதீங்க".. தனது உடல்நிலை குறித்து ரிஷப் பண்ட் உருக்கம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இனிய நண்பர் ஸ்டாலினுக்கு"... அட்வான்ஸாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!!
- "மனைவி வெச்ச மீன் குழம்பு ஃபேவ்ரைட்.. அப்றம்"... முதல்வர் ஸ்டாலின் சொல்லும் டயட் சீக்ரெட்ஸ்.. EXCLUSIVE
- 118 படம் தயாரித்த சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர் முன் செல்ஃபி எடுத்த முதல்வர்.. வைரல் பதிவு..!
- முதல்வர் ஸ்டாலின் சென்ற ரயில் பாதியில் நிறுத்தம்.. அபாய சங்கிலியை பெண் இழுத்ததால் பரபரப்பு..!
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசனை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவன்.. முழு விவரம்
- பொங்கலோ பொங்கல்!! தொகுதி மக்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.. அவரே பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ..!
- ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
- Bharat Jodo Yatra : “அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் தெருவில் வந்து நிற்பேன்.” - ராகுல் காந்தி யாத்திரையில் கமல் பேச்சு!
- #Breaking: ஆளுநர் ஒப்பதல்.. அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின்.? வெளியான பரபரப்பு தகவல்கள்..
- "ஒண்ணா இருந்தாலும், எதிரும் புதிருமா இருந்தாலும் இது நமக்கு பொருந்தும்".. அரசியல் மொழியில் விக்ரமனிடம் பேசிய கமல்!!