"நீதி ஜெயிக்கணும்னா ஓட்டு போடுங்கனு சிம்பாலிக்கா சொல்றாங்களோ" MNM வேட்பாளர் அதிரடி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை, 03 பிப்ரவரி, 2022:- "நீதி ஜெயிக்கணும்னா ஓட்டு போடுங்கனு சிம்பாலிக்கா சொல்றாங்களோ".. கோவலன் நகரில் ட்ரெண்ட் ஆன 'சிலம்பு செல்வி'.

Advertising
>
Advertising

பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வரும் புது வசதி.. நம்மல எமோசனலாக்க ரூம் போட்டு யோசிச்சுருங்கப்பா மெட்டா குரூப்!

தமிழகம் எங்கும் வேட்புமனுத் தாக்கல் அனல் பறக்கும் நிலையில், கையில் சிலம்பு ஏந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மதுமிதா.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் அனைத்து முழு முனைப்பு காட்டி வரும் நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் இந்தமுறை திமுக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். தற்போது நடக்கவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை நழுவவிடக்கூடாது என முன்னனி கட்சிகள் முழுவேகம் காட்டியுள்ளனர்.

கடந்த முறை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் களம் கண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பலத்த போட்டியாளாராக இறுதிவரை வந்து தோல்வியை தழுவினர். அந்தமுறை மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார் கமலஹாசன். இந்தமுறையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக வேட்புமணு தாக்கல் முழுவீச்சியில் நடைபெற்று வருகிறது.

 

மநீம கட்சியிலிருந்து பல முக்கிய புள்ளிகள் விலகி மாற்று கட்சியில் இணைந்துள்ள போதிலும்,  கட்சியை தற்போது மநீம தலைவர் கமலஹாசன் தனிச்சையாக கையாண்டு வருகிறார். மநீம கட்சியில் பல உட்பூசல்கள் அவ்வபோது நிகழ்ந்தாலும், கட்சித்தலைவர் கமலஹாசன் போலவே வேட்பாளர்களும் வித்தியாசத்தை கையாளுகின்றனர். அதிலும், வேட்பு மனுத்தாக்கலை சற்று வித்தியாசமாக கையாண்டுள்ளார் மநீம வேட்பாளர் மதுமிதா.

மதுரையில் வரலாற்று இடம் அரங்கேறிய மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வது வார்டு கோச்சடை கிராமத்தில் வேட்புமனு தாக்கல் செய்த மதுமிதா, கையில் சிலம்போடு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். கண்ணகி சிலம்பு ஏந்தி நீதி கேட்பது போல், தற்போது மநீம வேட்பாளர் சிலம்பு ஏந்த மறைமுக காரணம் இருக்குமா என சிலருக்கு கேள்வி எழுந்துள்ளது. மதுரையை அடிப்படையாக கொண்டதால் காற்சிலம்பு ஏந்தினார இல்லை நீதி கேட்கிறாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

‘அம்மா பசிக்குது’.. நூடுல்ஸ் சமைக்க கேரட் எடுத்துச் சென்ற மகள்.. கோவை அருகே சோகம்..!

MADURAI CANDIDATE, CARRY A SILAMBU, MNM CANDIDATE, NOMINATE POLL, வேட்புமனு தாக்கல், மநீம வேட்பாளர், MNM வேட்பாளர், LOCALBODY ELECTION 2022

மற்ற செய்திகள்