'பேரவைக்குள் செல்போனுடன் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா'... 'மீண்டும் கிளம்பியுள்ள சர்ச்சை'... நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா பேரவைக்குள் செல்போனில் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபைக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தவோ அல்லது செல்போனில் பேசவோ கூடாது என்பது சட்டமன்ற விதியாகும். எனவே பேரவைக்குள் வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரங்கத்திற்கு வெளியே உள்ள லாக்கரில் செல்போனை வைத்துவிட்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வின்போது, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, விதிமுறைகளை மீறி சட்டப்பேரவை அரங்கில் செல்போனில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 2011ஆம் ஆண்டு, பேரவை நிகழ்வின்போது செல்போனில் வீடியோ எடுத்ததால், டி.ஆர்.பி.ராஜாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவர் மீண்டும் அதே சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்