காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஆகியோர் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முன்னதாக, “வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்! சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! தமிழ்நாடு வாழ்க தமிழர் தரணியாள!” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், “ஒவ்வொருவர் இல்லத்தின் வாசலிலும் "தமிழ்நாடு வாழ்க" எனக் கோலமிட்டுத் தமிழர் திருநாளாம் தை முதல் நாளை வரவேற்போம்.” என கேட்டுக்கொண்ட முதல்வர், முன்னதாக கொளத்தூரிலும், பின்னர் இன்று கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தினருடனும் பொங்கல் விழா கொண்டாடினார். இதற்கு முன்னரே அண்ணா அறிவாலயத்திலும், கருணாநிதி நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, “நாம் அமைதியாகக் கொண்டாட திருவிழா- விடுமுறை நாட்களில் குடும்பங்களைப் பிரிந்து பணியாற்றும் காவலர்கள், தியாகத்தை மனமுவந்து ஏற்கும் அவர்தம் குடும்பத்தினர் என்றும் போற்றுதலுக்குரியவர்கள்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “நேரம் காலம் பார்க்காமல் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க உழைக்கும் காவல் துறையினருடன், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து தமிழர் திருநாளை பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தோம்” என குறிப்பிட்டு அப்புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பொங்கலோ பொங்கல்!! தொகுதி மக்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.. அவரே பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ..!
- ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
- அர்ஜுனா விருதுடன் அமைச்சர் உதயநிதியை சந்தித்த பிரக்யானந்தா.. அமைச்சரின் உருக்கமான ட்வீட்.!
- "உங்களை நேர்ல சந்திச்சு நன்றி சொல்லணும்".. முதல்வருக்கு கடிதம் எழுதிய 3 ஆம் வகுப்பு மாணவி.. நெகிழ்ச்சி பின்னணி..!
- "அமைச்சர் பதவி கிடைக்க காரணமே இவரு தான்".. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..!
- "அம்மாவுக்கு தான் சந்தோஷம்..".. உதயநிதியை வாழ்த்தி இளையராஜா Viral குரல் பதிவு!
- "கருணாநிதியை விட ஸ்டாலின் டேஞ்சரஸ்... ஸ்டாலினை விட உதயநிதி டேஞ்சரஸ்.. கதறியவர்களுக்கு தெரியும்.!".. வித்தியாசமாக வாழ்த்திய கரு. பழனியப்பன்
- "அன்பினால் மக்கள் மனங்களை ஆளும்".. அமைச்சர் உதயநிதியை வாழ்த்தி மேயர் பிரியா Tweet!
- "ஸ்போர்ட்ஸ்ல சீனா மாதிரி".. பத்திரிகையாளரின் கேள்வி.. கலகலக்க வச்ச அமைச்சர் உதயநிதியின் பதில்..!
- “உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்..” — அமைச்சர் உதயநிதிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து..! Udhayanidhi Stalin