சென்னை மருத்துவமனையில் கொரோனா ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல்வர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Advertising
>
Advertising

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு முன் களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதன்படி நேற்று சென்னை பட்டினம்பாக்கம் எம்ஆர்சி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் இன்று (11.01.2022) சென்னை காவிரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். மேலும் அனைத்து முன்கள பணியாளர்களும், இணை நோய் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

MKSTALIN, BOOSTERDOSE, COVIDVACCINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்