வண்டிய நிறுத்துங்க.. காரிலிருந்து இறங்கிச் சென்று முதல்வர் செய்த செயல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் மக்களை கலவரப்படுத்தத் துவங்கியுள்ளது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் சிலர் ஒழுங்காக கடைபிடிப்பது கிடையாது.

வண்டிய நிறுத்துங்க.. காரிலிருந்து இறங்கிச் சென்று முதல்வர் செய்த செயல்..!
Advertising
>
Advertising

அரசும் பல்வேறு வழிகளில் முகக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் நிர்வாண மூக்கோடுதான் ஊர் சுற்றுகிறார்கள் சிலர். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காரில் சென்றுகொண்டிருந்த போது, சாலையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திருந்த நபர்களைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.

 

MK Stalin Stops Car, Distributes Masks To Violators In Chennai


கீழே இறங்கிய ஸ்டாலின், முகக்கவசம் அணியாத மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கியது மட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் எனவும் சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது.. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன குட்நியூஸ்

 

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின்,” தலைமைச் செயலகத்திலிருந்து முகாம் அலுவலகம் திரும்புகையில், சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பதை கவனித்தேன். அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன். அனைவரும் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி- முகக்கவசம்- கிருமிநாசினி- தனிமனித இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பீர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின்போது தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

யோவ்.. கடனை கட்டிட்டு செத்து போ..' விவசாயியை தற்கொலைக்கு தூண்டும் படி பேசிய தனியார் நிறுவன பெண் ஊழியர்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று 1,03,119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், ஒரே நாளில் 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. நேற்று முன்தினம் 1,594 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னையில் நேற்று 876 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பிலும் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் முக்ககவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்துவரும் வேளையிலும் மக்கள் அதனை கவனமாக பின்பற்றுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

CHIEF MINISTER MK STALIN, CHENNAI, DISTRIBUTES MASKS, CORONA, COVID-19, கொரோனா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்