“தமிழக முதல்வருக்கு நன்றி!”.. புதிய கல்விக் கொள்கையில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவு!.. ஸ்டாலின் போட்ட பரபரப்பு ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் பெயரால் வரும் மும்மொழி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி எதிர்த்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மொழி கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையினூடே பலரது கல்வி உரிமையை பறிப்பது என பல்வேறு விஷயங்களைப் பற்றி திமுக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அதன் அடிப்படையில் முதல்வர் தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பில் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது என்று கூறிய முதல்வர், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்