"Trolls, மீம்ஸ் எல்லாம் கவனிக்குறீங்களா?".. கோபிநாத் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். இவர் மார்ச் 1 ஆம் தேதி, தனது 70 ஆவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடி இருந்தார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகினர், தொழில் துறையினர் என பலரும் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

Advertising
>
Advertising

திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார். தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார்.

அப்போது இன்றைய காலக்கட்டத்தில் ட்ரோல்ஸ், மீம்ஸ் உள்ளிட்டவற்றை வைரல் ஆவதை கவனிப்பீர்களா என கோபிநாத் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், "அதெல்லாம் பார்க்குறது உண்டு. எல்லாமே பார்க்கிறது இல்ல, சில குறிப்பிட்டது எல்லாம் சொல்லுவாங்க. அதனால அதெல்லாம் விரும்பி பார்ப்பாங்க. சில நல்ல செய்திகள் வரும் போது, அதை தேவைப்படும் போது மட்டும் எடுத்துக்குறேன்.


சிலர் தேவையில்லாத விமர்சனங்கள் வரும் போது அதையெல்லாம் வந்து நான் பெருசு படுத்துறது இல்ல. அது புறம் தள்ளிடுறேன். அதை பெரிசுபடுத்தினால் தான் அது மறுபடி மறுபடி பெருசா நடந்துகிட்டே இருக்கும். அதற்கான விளக்கத்தை சொல்லி நான் நேரத்தை வீணடிக்கிறது இல்ல" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கேள்வி ஒன்றை எழுப்பி இருந்த கோபிநாத், "ஒரு பெரிய ஆளுமையின் பிள்ளையாக இருப்பது பல நேரம் பலமாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருக்கடி ஏற்படும். ஒரு பெரிய பாடகர் அப்படின்னா அவருடைய மகனை எடுத்த உடனேயே அவங்களோட கம்பேர் பண்ணுவாங்க. அந்த மாதிரியான நெருக்கடிகள் உங்களுக்கு இருக்கிறதா?. உள்ளுக்குள்ள தோணி இருக்கா எப்பயாவது? " என கோபிநாத் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் சொன்ன முதல்வர் மு.க. ஸ்டாலின், "பலமுறை நடந்திருக்கு. அது இப்பவும் அடிக்கடி வரும். இப்பவும் வாரிசு வாரிசுன்னு சொல்லும் போது எனக்கு ஒரு பக்கம் வேதனையா தான் இருக்கும். ஆனா அதையும் கடந்து, அந்த வாரிசு என்கிற விஷயத்தை மட்டும் வச்சிக்கிட்டு வரக்கூடாது. என்னோட உழைப்பாலயும், நான் செய்யுற பணிகளாலயும் மக்களுக்கு என் மீதும் ஏற்படுகிற நம்பிக்கைல தான் நான் வரணும்னு விரும்பினேன். அப்படித்தான் வந்துருக்கேன்னு நினைக்கிறேன். அதைத்தான் நான் கடைப்பிடிப்பேன்" என தெரிவித்தார்.

MKSTALIN, DMK, POLITICS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்