"அம்மா சமையலா?.. மனைவி சமையலா?".. கோபிநாத் கேட்ட எடக்கு முடக்கு கேள்வி.. அசராம பதில் சொன்ன முதல்வர் MK ஸ்டாலின்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து சிறப்பாக செயல்பட்டு வந்த மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகவும் தேர்வாகி இருந்தார்.

                                                   Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

தொடர்ந்து, மக்களுக்கான சிறப்பான ஆட்சியையும் அளித்து வரும் ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தும் தீர்வு கண்டு வருகிறார்.

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்களையும் மிக ஜாலியாகவும் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

ரொம்ப ஜாலியான பதில்ஸ்..

பொதுவாக, அரசியல் என்றாலே முதல்வர் சீரியஸாக இருப்பார் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக தோன்றும். அப்படி இருக்கையில், இந்த பேட்டியின் அனைத்து பாகங்களிலும் மிகவும் ஜாலியாக முதல்வர் என்ற ஒரு தோணி இல்லாமல் மிக இயல்பாகவும், ஜாலியாகவும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அரசியலை தவிர, பள்ளி, கல்லூரி காலங்களில் நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படங்கள் பார்க்க சென்றது பற்றியும், எம்ஜிஆர் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோ திரை அரங்கிற்கு சென்று பார்ப்பது என பல விஷயங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதே போல தனது சகோதரர் முக அழகிரியுடன் சேர்ந்து பைக் ஓட்ட தான் கற்றுக் கொண்டது குறித்தும் என பல பால்ய கால சம்பவங்கள் குறித்து பேசி இருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

"அம்மா சமையலா? மனைவி சமையலா?"

இதனிடையே, சில Rapid Fire கேள்விகளையும் முதல்வர் MK ஸ்டாலினிடம் முன் வைத்திருந்தார் கோபிநாத். அப்போது, எதிர்க்கட்சிகள் குறித்தும், கலைஞர் கருணாநிதி குறித்தும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் பல்வேறு விஷயங்கள் இந்த Rapid Fire செக்ஷனில் முன் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மனைவி மற்றும் அம்மா சமையல் குறித்தும் முதல்வர் MK ஸ்டாலினிடம் முன் வைக்கப்பட்ட கேள்வியும், இதற்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதிலும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

"அம்மா சமையலா? மனைவி சமையலா?" என்ற கேள்வியை கோபிநாத் முன் வைத்திருந்தார். இதற்கு பதில் சொன்ன MK ஸ்டாலின், "ரெண்டு பேருக்குள்ள சண்டை மூட்டி விடுறதுக்கான கேள்வின்னு நெனைக்குறேன். ரெண்டு பேரு நடுவுல சண்டை வர நான் தயாரா இல்லை" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கோபிநாத், "இன்னுமா இப்படி எல்லாம் இருக்கு?.. அசைவத்துக்கு ஒருத்தவங்க, சைவத்துக்கு ஒருத்தவங்கன்னு சொல்லி பிரிச்சு விட்டுடலாமா?" என முதல்வரிடம் ஜாலியாக கேட்கிறார் கோபிநாத். "இல்ல அப்படி இல்ல. நான் அப்படி சொல்ல விரும்பல. அம்மா சமையல் தான் முதல்ல, அப்புறம் மனைவி சமையல்" என்றும் பதில் சொன்னார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

MKSTALIN, GOBINATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்