"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்".. அப்படி சொல்றதுக்கு காரணம் இதுதான்.. ரொம்ப நாள் கழிச்சு முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்.. Exclusive!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். இவர் மார்ச் 1 ஆம் தேதி தனது 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகினர், தொழில் துறையினர் என பலரும் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார். தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார்.
அதே போல முதலமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு பதவி ஏற்ற சமயத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என கூறியதன் காரணம் பற்றி தற்போது பேசி உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், "அது வந்து தலைவர் பேரால நம்ம உறுதி எடுத்து இருக்கிறோம். தலைவரை எடுத்தா அவரோட தந்தை பெயர்லயும் உறுதி எடுத்துக்கணும். மு.க. ஸ்டாலின் என்பது தான் என்னுடைய இனிஷியல். அதனால முத்துவேலுக்கு என்ன காரணம், க -வுக்கு என்ன காரணம் என்பதை சொல்லிட்டு எடுக்கணும்ன்னு அன்னைக்கி காலையில தான் முடிவு எடுத்து அதை அறிவிச்சேன்" என தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் பலரும் எமோஷனல் ஆனதற்கான காரணம் குறித்து கோபிநாத் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் சொன்ன முக ஸ்டாலின், "அவங்க எல்லாரும் ரொம்ப வருடத்துக்கு முன்னாடி அந்த பொறுப்புக்கு நான் வரணும்னு விரும்புனவங்க, இன்னும் வரலைன்னு ஏக்கத்தோட இருந்தவங்க. கலைஞருடைய காலத்திற்குப் பிறகு நிச்சயம் வரும்ன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா நான் பொறுமை காத்தேன்.
நேரடியா மக்களை சந்திச்சு, மக்கள் மூலமா வரக்கூடிய ஆட்சி தான் நிலைத்து நிற்கும் அப்படின்னு தலைவர் சொல்லுவாரு. அந்த அடிப்படையில தான் நான் அதை விரும்பினேன். அதனால ஆட்சிக்கு வந்தப்போ, அங்கிருந்து பார்த்தவங்களுக்கு மட்டும் இல்லாம தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கும் நெகிழ்ச்சியா அமைஞ்சிருச்சு அந்த தருணம்" என குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேக் வெட்டுறப்போ நடந்த சுவாரஸ்யம்.. திடீர்ன்னு எழுந்த சிரிப்பலை.. திரும்பி முதல்வர் MK ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!!
- "இனிய நண்பர் ஸ்டாலினுக்கு"... அட்வான்ஸாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!!
- "மனைவி வெச்ச மீன் குழம்பு ஃபேவ்ரைட்.. அப்றம்"... முதல்வர் ஸ்டாலின் சொல்லும் டயட் சீக்ரெட்ஸ்.. EXCLUSIVE
- கல்யாணம் முடிஞ்சு வரும்போது கண்கலங்கிய மனைவி.. முதல்வர் முக ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை!!
- "ஸ்கூல் கட் அடிச்சிட்டு எம்ஜிஆர் படத்துக்கு போனப்போ, போலீஸ் புடிச்சுட்டாங்க".. பள்ளிப் பருவத்தில் நடந்ததை நினைவுகூர்ந்த முதல்வர்!!
- ஸ்டாலின் எனும் பெயருக்கு பின்னால் இவ்ளோ பிரச்சனை வந்துச்சா?.. ஆனாலும் கலைஞர் சொன்ன அதிரடி பதில்..!
- உதயநிதியா? செந்தாமரையா?.. யாரு செல்லப்பிள்ளை..😍 முதல்வர் MK ஸ்டாலின் அசத்தல் பதில்.. Exclusive
- முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் மரணம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்
- முதல்வர் கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் உடைந்து விழுந்த ராட்சத சிக்னல்.. கள ஆய்வின்போது பரபரப்பு..!
- 118 படம் தயாரித்த சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர் முன் செல்ஃபி எடுத்த முதல்வர்.. வைரல் பதிவு..!