"அண்ணன் BIKE ஓட்ட சொல்லி கொடுத்தாரு.. கீழ விழுந்து 2 பேருக்கும் Fracture" - அழகிரி-யுடனான பால்ய நினைவுகள்..! முதல்வர் ஸ்டாலின் Exclusive

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து சிறப்பாக செயல்பட்டு வந்த மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகவும் தேர்வாகி இருந்தார்.

                               Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

தொடர்ந்து, மக்களுக்கான சிறப்பான ஆட்சியையும் அளித்து வரும் ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தும் தீர்வு கண்டு வருகிறார்.

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார்.

ஜாலியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்

பொதுவாக ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருப்பதால் அவர் இப்படி தான் இருப்பார் என பலர் மனதிலும் சில எண்ணங்கள் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் சுக்கு நூறாக்கும் வகையில், மிகவும் ஜாலியாக நட்புடன் இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.


மேலும் இந்த பேட்டியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தனது குடும்பம் குறித்தும், தன்னுடைய பொழுது போக்கு விஷயங்கள் குறித்தும், திருமணம் குறித்தும் என பல்வேறு விஷயங்களை மிகவும் ஜாலியாக நேயர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.

பைக் ஓட்ட கத்துக் குடுத்தது..

அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், "நீங்கள் கார் பிரியரா? பைக் பிரியரா?" என்ற கேள்வியை கோபிநாத் முன் வைத்திருந்தார். இதற்கு பதில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், "நான் பள்ளிக்கூடம், கல்லூரியில் படிக்கும் போது முதல்ல ஸ்கூட்டர் ஓட்டிட்டு இருந்தேன். அந்த ஸ்கூட்டர் ஓட்ட கத்துக் கொடுத்ததே எங்க அண்ணன் அழகிரி தான். பீச்ல போய் கத்து கொடுத்தாரு. அப்போ வண்டிய எடுத்ததுமே சறுக்கி கீழே விழுந்துட்டோம்.

Images are subject to © copyright to their respective owners

கார்ல இதான் பேவரைட்!!..

அவருக்கு கால் Fracture, எனக்கு கை Fracture. ராயப்பேட்டை ஹாஸ்பிடல்ல போய் அட்மிட் ஆனோம். அதுக்கப்புறம் பைக் அதிகமா ஓட்டுறது இல்ல. அடுத்து எனக்கு வந்து செகண்ட்ஸ் கார் ஒன்னு வாங்கி அதை கொஞ்சம் ரிப்பேர் பண்ணி, புதுப்பிச்சு அதை ஓட்டுனேன். அதுல ஃபியட் கார்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்

.

எலிகண்ட் ஃபியட் கார் தான் வாங்குனேன். 7619 தான் அந்த கார் நம்பர். அதுல ரேடியேட்டர் எல்லாம் தண்ணி ஊத்திருச்சு" என முதல்வர் தெரிவிக்க, "உங்களுக்கு வாகனத்துக்கும் இவ்வளவு பிரச்சனையா?" என்றும் கோபிநாத் கேட்கிறார். இதற்கு சிரித்துக் கொண்டே ஆமாம் என்றும் ஸ்டாலின் கூறுகிறார்.

MK STALIN, ALAGIRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்