"மெஜாரிட்டி இல்லாத ஆட்சி, விலைக்கு வாங்கிடலாம்ன்னு சொன்னாங்க".. CM ஆகுறதுக்கு முன்னாடி நடந்தது என்ன?.. MK ஸ்டாலின் Open Talk!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். இவர் மார்ச் 1 ஆம் தேதியான இன்று தனது 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | அஞ்சு வருசமா உருகி காதலிச்ச இளம் பெண்ணை.. பட்டப்பகலில் கொலை செய்த இளைஞர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி!!

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகினர், தொழில் துறையினர் என பலரும் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார். தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார்.

முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் பலரும் எமோஷனல் ஆனதற்கான காரணம் குறித்து கோபிநாத் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் சொன்ன முக ஸ்டாலின், "அவங்க எல்லாரும் ரொம்ப வருடத்துக்கு முன்னாடி அந்த பொறுப்புக்கு நான் வரணும்னு விரும்புனவங்க, இன்னும் வரலைன்னு ஏக்கத்தோட இருந்தவங்க. கலைஞருடைய காலத்திற்குப் பிறகு நிச்சயம் வரும்ன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா நான் பொறுமை காத்தேன்.

எல்லாரும் உடனே சொன்னாங்க மெஜாரிட்டி இல்லாத ஆட்சி தான் நடக்குது, அப்படி இப்படி இருக்கு இந்த ஆட்சியை விலைக்கு வாங்கிடலாம், நம்ம ஆட்சிக்கு வந்துடலாம் என சொன்னார்கள். அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அதுல ஜெயிச்சு இருக்கலாம். ஆனால் அதை விரும்பல. கொல்லைப்புறமா ஆட்சிக்கு வருவதற்கு கலைஞர் என்னைக்குமே விரும்புனது கிடையாது.

நேரடியா மக்களை சந்திச்சு, மக்கள் மூலமா வரக்கூடிய ஆட்சி தான் நிலைத்து நிற்கும் அப்படின்னு சொல்லுவாரு. அந்த அடிப்படையில தான் நான் அதை விரும்பினேன். அதனால ஆட்சிக்கு வந்தப்போ, அங்கிருந்து பார்த்தவங்களுக்கு மட்டும் இல்லாம தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கும் நெகிழ்ச்சியா அமைஞ்சிருச்சு அந்த தருணம்" என குறிப்பிட்டார்.

Also Read | CM ஆனதுக்கு அப்புறம் பார்த்த முதல் படம்.. மிசா -ல இருக்குறப்போ நானும் அந்த கொடுமையை அனுபவிச்சுருக்கேன்.. MK ஸ்டாலின் ஷேரிங்ஸ்!!

MKSTALIN, CM MK STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்