“பெரும் உயிரிழப்புகள், அழிவுகள் வேதனை அளிக்கிறது” - துருக்கி நிலநடுக்கம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

துருக்கியில் நேற்று நிகழ்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படலாம் என நிபுணர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்திருந்தது தற்போது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இது தான் சரியான நேரம்"... திடீர்ன்னு ஆஸ்திரேலியா கேப்டன் எடுத்த முடிவு.. கலங்கிய ரசிகர்கள்!!

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, வீரர்கள் பாடுபட்டு வந்தனர்.

ஆனால், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலைய செய்தது. இந்த நடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான  சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவிலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளன.

இந்நிலையில் தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டரில், “துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன, மேலும் பெரும் உயிர் இழப்புகள், காயங்கள் மற்றும் அழிவுகளால் நான் வேதனைப்படுகிறேன். இந்த துயரமான நேரத்தில் இரு நாட்டு மக்களுக்கும் எனது இதயம் நெகிழ்கிறது.” என உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Also Read | துருக்கி பூகம்பத்தை 3 நாளைக்கு முன்னாடியே கணிச்ச நிபுணர்.. அதுவும் ரிக்டர் அளவோட சொல்லிருக்காரு.. யாருப்பா இவரு?

TURKEY EARTHQUAKE, MK STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்