'வரூம்.. ஆனா வராது..' மோடியின் ‘இந்த ஒரு வாக்குறுதியை’ கிண்டலடித்த ஸ்டாலின்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த மக்களவைத் தேர்தலில் அவரது பாஜக கட்சி சார்பாக அளித்த வாக்குறுதியான, இந்திய குடிமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாயை போடுவதாகச் சொன்னதை நிறைவேற்றவில்லை என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடும் வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரித்து மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், பிரதமராவதற்கு முன்பாக மோடி அளித்த 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் போடப்படும் என்கிற வாக்குறுதியை கிண்டலடித்து பேசியுள்ளார். இதுபற்றி பேசிய மு.க.ஸ்டாலின்‘ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை 2 மடங்காக உயர்த்துவதாக மோடி கூறினார். ஆனால் இதுவரைக்கும் அது நடந்திருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசியவர், ‘வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை தானே சென்று மீட்டுக்கொண்டுவந்து இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குக்கும் 15 லட்சம் கிடைத்திருக்கிறதா? அதை விடுங்கள் 15 ஆயிரமாவது வந்திருக்கிறதா யாருக்காவது.? 15 ரூபா? அட்லீஸ்ட் 15 பைசா? வரும் வரும்னு சொல்றாங்க. வரூம்... ஆனா வராது’ என்று சீரியஸாக ஆனால் காமெடி தொனியில் பேசினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்