கேக் வெட்டுறப்போ நடந்த சுவாரஸ்யம்.. திடீர்ன்னு எழுந்த சிரிப்பலை.. திரும்பி முதல்வர் MK ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். இவர் மார்ச் 1 ஆம் தேதியான இன்று தனது 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எப்புடிங்க".. வலையில் சிக்கிய ராட்சத மீன்... மீனவருக்கு அடித்த ஜாக்பாட்.. விலை மட்டும் இவ்ளோ ரூபாய்க்கு போகுமா?!!

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகினர், தொழில் துறையினர் என பலரும் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதே போல, தனது பிறந்த நாள் விழாவையும் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டாடி இருந்தார். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார்.

தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார். அப்படி ஒரு சூழலில், தனது குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேக் வெட்டிய போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், கலாநிதி மாறன் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தனது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் மனைவி துர்கா ஆகியோர் மாறி மாறி மாலை மாற்றிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடவும் செய்திருந்தார் ஸ்டாலின்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த சமயத்தில் அனைவரும் ஹாப்பி பர்த்டே பாடல் பாடும் போது, கடைசியில் கலாநிதி மாறன் ஹாப்பி பர்த்டே டியர் மாமா என்றும் குறிப்பிட அங்கிருந்த அனைவரும் சிரிக்கவும் செய்தனர். அதே வேளையில் தன் பின்னால் நின்ற கலாநிதி மாறனை சிரித்த முகத்துடன் ஸ்டாலின் திரும்பி பார்க்கவும் செய்திருந்தார். இது தொடர்பான தருணங்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | 4 நாள் முழுக்க தூங்கிய பெண்.. "பகல்ல கண் தொறக்குறதே Rare".. வினோத நிலையால் அவதிப்படும் பெண்!!

MKSTALIN, CM MK STALIN, CM MK STALIN 70TH BIRTHDAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்