'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்'... 'விழாவுக்கு இவங்க வருவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கல'... பலருக்கும் இன்ப அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அணி அதிக இடங்களில் வென்றதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பதவியேற்பு விழாவில் பிரமுகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் தனபால், நவநீத கிருஷ்ணனும், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசனும் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். தற்போது யாரும் எதிர்பாராத வகையில் மு.க. அழகிரியின் மகள் மற்றும் மகன் ஆகியோர் பதவி ஏற்பில் பங்கேற்றுள்ளார்கள். இது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 

இதனிடையே, முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்