"MGR ரசிகரா?.. சிவாஜி ரசிகரா?".. கோபிநாத்தின் கேள்விக்கு முதல்வர் MK ஸ்டாலினின் அசத்தல் பதில்.. Exclusive!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து சிறப்பாக செயல்பட்டு வந்த மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகவும் தேர்வாகி இருந்தார்.

Advertising
>
Advertising

தொடர்ந்து, மக்களுக்கான சிறப்பான ஆட்சியையும் அளித்து வரும் ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தும் தீர்வு கண்டு வருகிறார்.

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்களையும் மிக ஜாலியாகவும் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

எம்.ஜி.ஆர் ரசிகரா? சிவாஜி ரசிகரா?

அப்போது அந்த காலத்தில் நிறைய திரைப்படங்கள் பார்ப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட, அப்போது "நீங்கள் யார் ரசிகர், சிவாஜி ரசிகரா?, இல்லை எம்.ஜி.ஆர் ரசிகரா?" என்ற கேள்வியை கோபிநாத் முன் வைக்கிறார்.

"கட்சியின் அடிப்படையில் பார்த்தீங்கன்னா எம்ஜிஆர் ரசிகர். நடிப்பு என்ற விஷயத்துல பார்த்தீங்கன்னா சிவாஜி ரசிகர். உண்மையாகவே எம்ஜிஆர் நடிக்கிற படம் பார்த்தீங்கன்னா, ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ போயிடுவேன். 'பறக்கும் பாவை' -ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆச்சு. நானு, முத்து, அழகிரி எல்லாம் போய் பார்க்கிறோம். அப்ப அவ்வளவு கூட்டம். தியேட்டர் கேட்டைத் தாண்டி உள்ள போக முடியல.

எம்.ஜி.ஆர் படம்ன்னா ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ

அப்ப கூட நடிச்ச என்.எஸ். நடராஜன்னு ஒரு ஸ்டண்ட் நடிகர். நடராஜன் அந்த படத்தில் நடிக்கிறார். அவர் உள்ள அழைச்சிட்டு போய், டிக்கெட் எல்லாம் கிடைச்சதுன்னு சொல்லி அழகிரி, முத்துவை மட்டும் அழைச்சிட்டு போனாங்க. என்னால உள்ள போக முடியல. அப்ப எல்லாம் அவ்ளோ டிமாண்ட் இருந்தது" என தெரிவித்தார்.

MK STALIN, MGR, SIVAJI GANESAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்