"தலைவர் மறைந்த போது அந்த வேதனையை விட"... வாழ்வில் மறக்க முடியாத தருணம்.. எமோஷனல் ஆன முதல்வர் MK Stalin!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். இவர் மார்ச் 1 ஆம் தேதி, தனது 70 ஆவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடி இருந்தார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகினர், தொழில் துறையினர் என பலரும் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார். தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார்.
அப்போது மகிழ்ச்சியாக இருந்த தருணம் குறித்தும், மனமடைந்து போன தருணம் குறித்தும் கோபிநாத் கேள்விகளை எழுப்ப இதற்கு பதில் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "நான் மனம் உடைந்து போய் அதுக்கப்புறம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, தலைவர் மறைந்த போது எவ்வளவு வேதனையில் இருந்திருப்பேன்னு உங்களுக்கு தெரியும். அந்த வேதனையை விட தலைவரை அடக்கம் செய்வதற்கு, தலைவர் விரும்பிய மாதிரி அண்ணா பக்கத்தில் உறங்கணும், அங்க ஓய்வெடுக்கணும்னு விரும்பினார்.
அதனால அந்த இடத்தை எப்படியாவது பெற்றிடனும்னு ஒரு முடிவோட இருந்தேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனா அன்னைக்கு இருந்த ஆட்சி அதற்கான அனுமதி கொடுக்கல. அதுக்கப்புறம் என்ன செய்றதுன்னு தவிச்சிட்டு இருந்தப்போ, ஒவ்வொருத்தரும் ஒன்னு ஒன்னு சொல்லிட்டு இருந்தாங்க. தலைவருடைய உடலை வச்சுக்கிட்டு அவரை அசிங்கப்படுத்தி விடக்கூடாது, அவரோட புகழுக்கு இழுக்க ஏற்படுத்திடக் கூடாதுன்னு இருந்தேன். அதனால Law and Order பிரச்சனை வரும், சட்ட ஒழுங்கு நிலை கெட்டுப் போகும்ன்னு அப்படிப்பட்ட முயற்சி எல்லாம் ஈடுபடக்கூடாதுன்னு பொறுத்து இருந்து நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்றத்தோட தீர்ப்பு வராத வரைக்கும் அப்படியே தவிச்சுக்கிட்டு இருந்தோம்.
ரெண்டு மணி அளவில் நீதிமன்றத்தில் இருந்து இடத்தை கொடுக்கணும் அப்படின்னு தீர்ப்பு வந்துச்சு. அப்ப எனக்கு ஏற்பட்டது ஆனந்தம்ன்னு சொல்றதா, இல்ல உணர்ச்சின்னு சொல்றதா, இல்லை வெளிச்சம் சொல்றதா, இல்ல வேதனைன்னு சொல்றதா. அப்படியே மனம் உடைந்து மகிழ்ச்சி வெளிப்படுத்த முடியாத அளவுக்கு என்னை அறியாமலே நான் பப்ளிக் முன்னாடி அழுதேன். அது தான் மறக்க முடியாத தருணம். அவர் நினைச்சதை நிறைவேத்திட்டேன்னு இருந்தது" என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்".. அப்படி சொல்றதுக்கு காரணம் இதுதான்.. ரொம்ப நாள் கழிச்சு முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்.. Exclusive!!
- "மெஜாரிட்டி இல்லாத ஆட்சி, விலைக்கு வாங்கிடலாம்ன்னு சொன்னாங்க".. CM ஆகுறதுக்கு முன்னாடி நடந்தது என்ன?.. MK ஸ்டாலின் Open Talk!!
- CM ஆனதுக்கு அப்புறம் பார்த்த முதல் படம்.. மிசா -ல இருக்குறப்போ நானும் அந்த கொடுமையை அனுபவிச்சுருக்கேன்.. MK ஸ்டாலின் ஷேரிங்ஸ்!!
- பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கேரள முதல்வர் பினராயி விஜயன்.. மலையாளத்தில் ரிப்ளை கொடுத்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..!
- கேக் வெட்டுறப்போ நடந்த சுவாரஸ்யம்.. திடீர்ன்னு எழுந்த சிரிப்பலை.. திரும்பி முதல்வர் MK ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!!
- முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் கமல் நெகிழ்ச்சி வாழ்த்து. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!!
- "இனிய நண்பர் ஸ்டாலினுக்கு"... அட்வான்ஸாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!!
- "மனைவி வெச்ச மீன் குழம்பு ஃபேவ்ரைட்.. அப்றம்"... முதல்வர் ஸ்டாலின் சொல்லும் டயட் சீக்ரெட்ஸ்.. EXCLUSIVE
- கல்யாணம் முடிஞ்சு வரும்போது கண்கலங்கிய மனைவி.. முதல்வர் முக ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை!!
- "ஸ்கூல் கட் அடிச்சிட்டு எம்ஜிஆர் படத்துக்கு போனப்போ, போலீஸ் புடிச்சுட்டாங்க".. பள்ளிப் பருவத்தில் நடந்ததை நினைவுகூர்ந்த முதல்வர்!!