‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலை’.. விவசாய கிணற்றில் மிதந்த பெண் சடலம்..! சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவசாய கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சடலமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரேணுகா. இருவருக்கும் திருமணமாகி 17 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரேணுகா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் பகல் முழுவதும் தூங்குவதும், இரவில் சமைப்பது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். மேலும் பகலில் தூங்காமல் நடமாடுபவர்களை கண்டால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரேணுகா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து பாண்டியன் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது விவசாய கிணறு ஒன்றில் பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு மனைவியின் உடலை அடையாளம் கண்ட பாண்டியன், அது ரேணுகா என உறுதி செய்துள்ளார். ரேணுகா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CRIME, CHENNAI, TAMILNADU, WOMAN, DIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்