Miss TamilNadu வென்ற கூலி தொழிலாளி மகள்.. தடையை தாண்டி சாதிச்சது எப்படி??.. Exculsive!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Mortuary'ல் இருக்கும் உடலை பார்க்க போன மருத்துவர்.. பையை திறந்ததும் கண்ட அதிர வைக்கும் காட்சி!!

இவரது மகளான ரக்சயா, தனது சிறு வயது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதன் விளைவாக, சமீபத்தில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றும் சாதனை புரிந்திருந்தார்.

வறுமையான குடும்ப பின்புலம் இருந்த பிறகும், தன் முன்பிருந்த தடைகளை தாண்டி சாதித்தே ஆக வேண்டுமென முயற்சிகளை மேற்கொண்டு வந்த இளம்பெண் ரக்சயாவுக்கு உரிய கிரீடமும் கிடைத்திருந்தது. மேலும், அடுத்தடுத்து வெற்றிகள் பெற்று மிஸ் இந்தியா பட்டத்தையும் வெல்வேன் என்றும் ரக்சயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனது பெற்றோருடன் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றையும் ரக்சயா அளித்துள்ளார். அப்போது பேசிய அவரது பெற்றோர், ஆரம்பத்தில் மகள் எடுத்த முடிவு பயமாக இருந்ததாகவும் ஆனால் அதன் பின்னர் அவர் சில போட்டிகளில் வெற்றி பெற்றது அந்த பயத்தை போக்கியதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து மிஸ் தமிழ்நாடு வென்றது பின் உள்ள விஷயங்களை பேசிய ரக்சயா, "தன் வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் தான் இந்த போட்டியில் நான் கலந்து கொண்டேன். அப்படி தெரிவித்திருந்தால் நிச்சயமாக என்னை அனுப்பி இருக்க மாட்டார்கள். என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை பற்றி என்ன கூறினாலும் நான் அதனை அதில் கவனம் கொள்ள மாட்டேன். அதனால் தான், எனது பெற்றோர்கள் சில நேரங்களில் என்னை நினைத்து பயந்தார்கள்.

ஆரம்பத்தில் ஆடிஷனல் தேர்வான நான், டிரெயினிங் முடித்த பின்னர் சிட்டி லெவல் கிரவுனிங்கில் கலந்து வெற்றி பெற்றேன். இதன் பின்னர் மாநில அளவிலும் வெற்றி பெற்று விடுவேன் என்று தன்னம்பிக்கை இருந்தது" என்றார்.

இதனையடுத்து தனது மகள் பற்றிய விமர்சனம் குறித்து பேசிய ரக்சயாவின் தந்தை, "என் காது கேட்கவே இந்த பெண் எங்கே வேஷம் போட்டு போகிறாள் என்றும் சிலர் விமர்சனம் செய்தனர். இந்த மாதிரி தப்பாக பேசியவர்களுக்கெல்லாம் இப்படி சாதனை புரிந்து தான் பதிலடி கொடுக்க முடியும்" என்றார்.

தொடர்ந்து தனக்கு ஆதரவளித்த நபர்கள் பற்றி பேசிய ரக்சயா, "எனது தம்பி மற்றும் என் பெஸ்ட் ஃப்ரண்ட் ஜனா ஆகிய இருவரும் தான் எனக்கு ஆதரவளித்தனர். பணம் கொடுத்து தான் உதவி செய்ய வேண்டும் என்பது கிடையாது. நம்முடன் இருந்து யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் உனது வேலையை பார்க்க வேண்டும் எனக்கூறி, நம்மை முன்னோக்கி செலுத்த யாராவது வேண்டும். அதற்கு அவர்கள் இரண்டு பேரும் எனக்காக இருந்தனர்" என்றார்.

இது தவிர, தான் எப்படி மிஸ் அழகி போட்டிக்காக தயாரானார் என்பது பற்றியும், உடல் மற்றும் முகத்தினை எப்படி பராமரித்து வந்தார்கள் என்பது பற்றியும் ஏராளாமான தகவலை ரக்சயா பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பான முழு வீடியோவைக் காண:

MISS TAMILNADU, MISS TAMILNADU TITLE WINNER, RAKSHYA, MISS TAMILNADU TITLE WINNER RAKSHYA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்