அவனுக்கு நடந்தது 'மருத்து அதிசயம்தான்'.. அபூர்வமாக, நடந்ததை நினைத்து நெகிழும் பெற்றோர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னைக்குட்பட்ட மதுரவாயலைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி தேவிஸ்ரீ. மகன் ராதேஷ். மூன்றே வயதான இந்த துறுதுறுச் சிறுவனுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி தொந்தரவுகள் வந்தவண்ணம் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் கடுமையான காய்ச்சல் தொற்றிக்கொள்ளவே சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்குதான் ராதேஷூக்கு லிவர் ஃபெயிலியர் என்றும், அதற்கான டோனருக்காக காத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஃபல்மினண்ட் லிவர் ஃபெயிலியர் என்று கூறப்படும் இந்த நோய்க்குறியின் பாதிப்பால் சிறுவனின் பெற்றோர்கள் மிகவும் துயரமடைந்துள்ளனர். எனினும் கல்லீரல் கிடைக்க தாமதமாகிக் கொண்டிருந்த வேளையில் ராதேஷூக்கு மூளை வீக்கமடையவும், அவனது உடலில் ஆங்காங்கே ரத்தக்கட்டும் உண்டாகத் தொடங்கியது. ஓ பாசிட்டிவ் பிளட் குரூப்பில் குழந்தைகளுக்கான கல்லீரல் கிடைப்பது அவ்வளவு சிரமம் என்பதையும் பெற்றோர்கள் அறிந்துகொண்டனர்.

இதனால் டோனர் கிடைக்கும் வரையில் ராதேஷை காப்பாற்ற காம்ப்ளெக்ஸ் ஐசியு லிவர் சப்போர்ட் தெரபி என்கிற சிகிச்சையை செய்து, எல்லா உறுப்புகளையும் எந்திரங்களின் இயக்கத்தின் மூலம் செயல்பட வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் அந்த ஆச்சர்யமான மருத்துவ அதிசயம் நடந்துள்ளது. மது, சர்க்கரை நோய், ரத்தத்தில் கலந்த கொழுப்பின் அளவும், தைராய்டு சுரப்பி, ஒபேசிட்டி, ஹைபடைட்டிஸ் உள்ளிட்ட பல காரணங்கள் கல்லீரல் செயல்படாமல் இருப்பதற்கு அடிப்படையாக உள்ளன. எனினும் பழுதானால், தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ளும் தனித்தன்மை வாய்ந்த கல்லீரல் மிகவும் முற்றிய நிலையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ராதேஷின் கல்லீரல் முழுமையாய் குணம் அடையத் தொடங்கிய மெடிக்கல் மிராக்கிள் நிகழ்ந்துள்ளது. ஆம், தன்னைத் தானே ராதேஷின் கல்லீரல் சரிசெய்யத் தொடங்கிய அதிசயத்தைக் கண்டு மருத்துவ உலகமே ஆச்சர்யத்தில் உறைந்துள்ளது. சில சமயம் மனிதர்களையும் மீறி இயற்கையின் அனாட்டமி நிகழ்த்தும் இந்த அதிசயம் மருத்துவ உலகில் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

MEDICAL, MIRACLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்