‘ரெண்டே மணி நேரம் தான்...’ ‘எந்த தழும்பும் இருக்காது...’ ஆண்களும் இனிமேல் ‘அது’ பண்ணனும்...! சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கருத்தடை சிகிச்சை செய்துக் கொள்வதற்கு பெண்கள் போல ஆண்களும் முன்வரவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று அவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை போதிய அளவிற்கு இல்லாததை மேற்கோள் காட்டி, இந்த பிரச்சனையை தீர்க்க, ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில் அரசிடம் ஏதேனும் திட்டமுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நாட்டின் பொருளாதாரம் மேம்பட மக்கள் தொகை கட்டுப்பாடு முக்கியம் எனவும், கருத்தடை செய்ய தனியாக துறை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், ஆண்களுக்கும் கத்தியின்றி ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி, இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2018-ம் ஆண்டு 80 பேருக்கும், 2019-ம் ஆண்டு 800 பேருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
விருப்பமுள்ள, தகுதியுள்ள ஆண்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய தயாராக உள்ளதாகவும், கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் பெண்களைப்போல் முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துணை முதல்வர்' என்ன 'மாடு' பிடி வீரரா?... 'துரைமுருகன்' கேள்வியால் சட்டப்பேரவையில் 'சிரிப்பொலி'... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' கொடுத்த 'விளக்கம்...!'
- "பேச்சை கொறைங்கப்பா... இது என்ன பொதுக்கூட்டம்மா...? "துரைமுருகன் பேச்சால் கடுப்பான 'முதலமைச்சர்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- தனியார் பள்ளிகளுக்கு ‘செக்’.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!
- பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!
- 1.76 லட்சம் கோடி ரொக்கம்.. உலக வங்கியில் 4 லட்சம் கோடி கடன்.. அதிரவைத்த வேட்பாளர்!
- பரிசுப் பெட்டியா? குக்கரா?.. ஒரே குழப்பமா இருக்கு.. பேரும் ஒரே மாதிரியா!