‘வீடு திரும்பும் 21 வயது இளைஞர்’.. ‘வெளியான ரிசல்ட்’.. ‘ஆனா 14 நாளைக்கு..!’ அமைச்சர் சொன்ன புதிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 38 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் மதுரையை சேர்ந்த ஒருவர் மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அயர்லாந்தின் டப்ளினில் இருந்து வந்த 21 வயது இளைஞர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரிடம் தொடர்ந்து 2 முறை சோதனை செய்ததில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. அவர் அடுத்த 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தபடுவார். இந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவை பாராட்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

CORONA, CORONAVIRUS, VIJAYABASKAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்