‘பொதுச்சுகாதார விதிகளில் சமரசம் கிடையாது’!.. தியேட்டரில் 100% அனுமதி விவகாரம்.. அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தியேட்டர்களில் 100% அனுமதிக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தியேட்டர்கள் 100% இருக்கையுடன் இயங்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர். மேலும் 100% இருக்கையுடன் இயங்க தியேட்டர்களுக்கு வழக்கப்பட்ட அனுமதிக்கு தடை விதிக்க கோரி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபு என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3.5 கோடி மதிப்பிலான புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வருகிறார். நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகையை ஆய்வு செய்ய உள்ளார்’ என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெறுவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும். பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவு திரும்பப்பெற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் பொதுச்சுகாதார விதிகளில் எந்த சமரசமும் இருக்காது’ என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்