"தாக்குதல் நடத்துனது யாரு?".. டெல்லி தமிழ் மாணவர்களுடன் VIDEO CALL-ல் பேசிய அமைச்சர் உதயநிதி.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டெல்லியில் தாக்கப்பட்ட தமிழ் மாணவர்களுடன் வீடியோ காலில் பேசி அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Advertising
>
Advertising

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | உயிரை காப்பாத்திய இந்திய ராணுவ வீரர்கள்.. நன்றி சொல்ல திரண்ட துருக்கி மக்கள்.. உருக்கமான வீடியோ..!

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நேற்று மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். மரணமடைந்த மும்பை மாணவர் தர்ஷன் சோலங்கிக்கு நீதி கிடைத்திட வேண்டும் என கோஷமிட்டபடி மாணவர்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது, பெரியார், அம்பேத்கர் மற்றும் கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படம் கொண்ட பதாகைகளை மாணவர்கள் கைகளில் வைத்திருந்தனர். அப்போது, ஒரு குழுவினர் ஊர்வலம் சென்ற மாணவர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த தலைவர்களின் படங்களும் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

இதில் பல மாணவர்கள் காயமடைந்திருக்கின்றனர். மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்திருந்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பல்கலைக்கழகங்கள் கல்வி பயிலும் இடமாக மட்டுமன்றி ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் இடமாகவும் இருக்கவேண்டும் எனவும், தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து, திமுக எம்பி செந்தில் குமார் டெல்லியில் உள்ள அந்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்திருக்கிறார். அப்போது, பெரியாரின் படத்தை அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் மையத்தில் திறந்து வைத்தார்.

இந்த சூழ்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் தாக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது, "எங்க இருக்கீங்க?, மருத்துவமனையில் இருக்கிறீர்களா?" என உதயநிதி கேட்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த மாணவர் கூறுகிறார். இதனைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியது யார்? என்பது குறித்தும் உதயநிதி விசாரித்தார். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பேசுவதாகவும் கூறிய அமைச்சர் உதயநிதி, மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | "கோலியோட ஃபார்முலாவை தான் ரோஹித்தும் பின்பற்றுகிறார்" - கேப்டன்சி பற்றி பேசிய கவுதம் காம்பீர்..!

UDHAYANIDHI STALIN, MINISTER UDHAYANIDHI STALIN, TAMIL STUDENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்