இன்று பிறந்த குழந்தைகளுக்கு ஜாக்பாட்.. முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி கொடுத்த 'தங்க' Gift..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

Advertising
>
Advertising

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நிலநடுக்கம் மாதிரி இருந்துச்சு".. நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.. 36 பேர் மரணம்.. பெரும் சோகம்..

முதல்வர் முக.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வர் தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் எளிமையான முறையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நாட்டின் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, தொகுதி மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் புத்தாடைகள் ஆகியவற்றை உதயநிதி வழங்கினார்.

இதனை தொடர்ந்து கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் மருந்து பெட்டகம் ஆகியவற்றையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தயாநிதி மாறன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேப்பாக்கம் தொகுதி செயலாளர் மதன் மோகன் ஆகியோர் பங்குபெற்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,"மாண்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளான இன்று, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ப.செயலாளர் அண்ணன் மதன் மோகன் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவித்து, மருந்து பெட்டகங்களை வழங்கி வாழ்த்தினோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கேரள முதல்வர் பினராயி விஜயன்.. மலையாளத்தில் ரிப்ளை கொடுத்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

UDHAYANIDHI STALIN, MINISTER UDHAYANIDHI STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்