"சிறிய வாய்ப்பும் மாற்றத்தை நிகழ்த்தும்".. நரிக்குறவர் சமுதாய பெண்களின் மகத்தான முயற்சி.. அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நரிக்குறவ சமுதாய பெண்களுக்கான பிரத்யேக விற்பனையகத்தை அமைச்சர் உதயநிதி இன்று திறந்து வைத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | கலங்கிப்போன மக்கள்..! இனி வரப்போற நாட்கள் ரொம்ப முக்கியம்.. துருக்கிக்கு ஐநா கொடுத்த அலெர்ட்..

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார் உதயநிதி. தொடர்ந்து இதுகுறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் நரிக்குறவ பெண்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான பிரத்யேக விற்பனை நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். திருப்பெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடையில் நரிக்குறவர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆலந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் தாமோ அன்பரசன் மற்றும் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.சுந்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அதில்,"சிறியதொரு வாய்ப்பும் அங்கிகாரமும் பெரும் சமூக மாற்றத்தை நிகழ்த்திடும் எனும் நம்பிக்கையோடு, திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில்  நரிக்குறவர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்களின் தயாரிப்பு பொருட்களுக்கான விற்பனை மையத்தை இன்று திறந்து வைத்தோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | வியாழக்கிழமை மேட்ச்.. சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்த இந்திய கிரிக்கெட் வீரர்.. IND vs AUS

UDHAYANIDHI STALIN, MINISTER UDHAYANIDHI STALIN, NARIKURUVAR, NARIKURUVAR WOMEN OUTLET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்