இம்முறையும் 'இடர்' வெல்வேன்... மீண்டு வருவேன்-நான் சென்னை... 'பிரபல' நடிகரின் குரலில்... 'அசத்தல்' வீடியோ உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டின் தலைநகரம் பல்லாயிரக்கணக்கான மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய சென்னை தற்போது கொரோனா தொற்றால் தன் இயல்பை சற்றே இழந்துள்ளது. சுனாமி, வெள்ளம், புயல் என எத்தனையோ இடர்களை சந்தித்த சென்னை இந்த கொரோனாவையும் வென்று மீண்டு வர வேண்டும் என்பதே கோடிக்கணக்கான மக்களின் ஆசையாக உள்ளது.
இந்த நிலையில் அதற்கு உற்சாகமூட்டுவது போல அசத்தல் வீடியோ ஒன்றை, அமைச்சர் வேலுமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சென்னை சந்தித்த சாதனைகள் மற்றும் சோதனைகளில் இருந்து மீண்டதை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தன்னுடைய அழுத்தமான குரலில் உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் வீடியோவில் உள்ள வரிகள் இதுதான்:-
தடைகள் ஆயிரம் தகர்த்தவன் படைகள் ஆயிரம் பார்த்தவன்
பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன்
பேரலையைக் கண்டவன், பேரிடரும் கண்டவன்
பெயர் மாறி, உரு மாறி வலுவானவன், எதுவந்த போதும் நிறம் மாறாதவன்
வந்தவர் எத்தனை, போனவர் எத்தனை கண்டது எத்தனை, கொண்டது எத்தனை
என் பலம் எனதல்ல, என்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம்.
நீரால், நெருப்பால், காற்றால், நிலத்தால், உளத்தால் எவ்வழி இடர் வரினும்,
தளர்வரினும் என் கரம் இறுகப் பற்றும் என் மக்களே என் பலம்.
எனக்கு எப்பொழுதும் என்றைக்கும் இன்றைக்கும் தோள் கொடுப்பர் கரம் பற்றி அல்ல,
முகத்தில் கவசம் அணிந்து சமூக விலகலோடு.
வீழ்வேனென்று நினைத்தாயோ! மீண்டு வருவேன்! நான்சென்னை!.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தலைவலி, வயிற்றுவலி... கொரோனா தொற்றுக்கான 6 'புதிய' அறிகுறிகள்!
- 'முன்னாள் அதிமுக அமைச்சருக்கு கொரோனா'... தனியார் மருத்துவமனையில் அனுமதி!
- “தொழிலும் செய்யனும்... கொரோனாவையும் சமாளிக்கனும்”.. அப்ப இதை செய்யுங்க! - பாலியல் தொழிலாளர்களுக்கு.. ‘வேற லெவல்’ கட்டுப்பாடு விதித்த நாடு!
- ’அதிர்ச்சி’ வீடியோ: 'கொரோனா 'நெகட்டிவ்' ரிப்போர்ட்... வெறும் ரூ 2,500 மட்டும் தான்!" - ’கூவிக்கூவி விற்கும்’ தனியார் மருத்துமனை!
- 'சூப்பர்' நியூஸ் சொன்ன சுகாதாரத்துறை... குறிப்பா 'இந்த' மாநிலங்கள் எல்லாம் வேற லெவலாம்!
- 'அப்படி இதுல என்ன இருக்குனு எல்லாரும் முண்டியடிச்சுட்டு வாங்குறாங்க!?'.. நீங்களே பாருங்க!.. 'கல்யாண முருங்கை'க்கு எகிறிய 'மவுசு'!
- மதுரையில் மேலும் 307 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது தொற்று!.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் 62,778 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே!
- கொரோனாவுக்கு 'முதல் தடுப்பூசி' தந்த தமிழன்! - உயிர்காக்கும் மருந்து கண்டுபிடித்து உச்சம் தொட்ட ஏழை விவசாயி மகன்! - நெகிழவைக்கும் கதை!
- நாளை முதல் மக்கள்... கூடுதல் 'கவனத்துடன்' செயல்பட வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர்