கொரோனா தொற்று காலகட்டத்தில்... மதுக்கடைகள் திறக்கப்படுவது ஏன்?.. அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதலமைச்சர் மனமுவந்து மதுக்கடைகளை திறக்கும் முடிவை எடுக்கவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் கரிசல்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "எல்லோரும் ஆண்டவனை வேண்டிக் கொள்ளுங்கள், மே 17-க்கு பிறகு ஊரடங்கு நீடிக்க கூடாது என்றால் அனைவரும் தனித்திருக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக ஒருவர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை.
கொரோனா நிவாரண நிதியாக இந்த மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலிப்பார். நிதி நிலைக்கு ஏற்றவாறு கொரோனா நிதி வழங்க முடிவு செய்யப்படும். பஞ்சமில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் நமது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
வணிகர்கள் கடை திறப்பதில் இன்னும் குழப்பம் ஏற்படுவதால் முறையான விதிமுறைகள் அறிவிக்கப்பட கோரிக்கை எழுந்துள்ளது. வணிகர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடைய தொலைபேசிக்கு அழைத்து கூறும் பட்சத்தில், அவர்களுக்கு காவல்துறை மூலம் தீர்வு வழங்கப்படும்.
நம்மை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்த காரணத்தால் நாமும் திறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. மதுவிற்காக மற்ற மாநிலங்களுக்கு அதிக அளவு பொதுமக்கள் செல்வதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரும் மனமுவந்து மதுக்கடை திறக்கும் முடிவை எடுக்கவில்லை. குடிமகன்கள் அவதிபடுகிறார்கள் என்ற அடிப்படையில்தான் மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி 5 நபர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அதிரடி' நடவடிக்கைகளால்... '50 நாட்களுக்கு' பின் 'பூஜ்ஜியம்' ஆன எண்ணிக்கை... 'நிம்மதி' அடைந்துள்ள 'நாடு'...
- கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்வு! கோயம்பேடு சந்தையில் இருந்து போனவர்களால்தான் அதிகமான நோய்த்தொற்று!
- 'உயிரிழந்தவர்கள்' பெரும்பாலானோருக்கு இருந்த 'குறைபாடு'... 'இதை' கொடுத்தால் 'வேகமாக' குணமடையலாம்... ஆய்வாளர்கள் 'புதிய' தகவல்...
- "தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- 'இதுதான் கொரோனாவிற்கு மருந்து...' 'உங்க முன்னாடியே குடிச்சு காட்டுறேன்...' இதுவரைக்கும் எங்க நாட்டுல யாருமே சாகல...!
- 'நானோ’ துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல் பூச்சு...' 'கொரோனா' வைரசை செயலிழக்க செய்யும் 'புதிய தொழில்நுட்பம்...' 'சென்னை ஐ.ஐ.டி.யின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'சென்னை கழிவு நீரில் 'கொரோனாவின் இறந்த செல்கள்'... 'தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக கண்டுபிடிப்பு'... பரபரப்பு தகவல்!
- 'பொது இடங்களில்' வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 'புதிய யுக்தி'... 'டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'இந்த மருந்து கொரோனாவ கண்ட்ரோல் பண்ணுது...' '11 நாளில் சரி ஆயிடுறாங்க...' 'எனர்ஜியும் நல்லாவே கிடைக்குது...' தொற்றுநோய் தலைவர் அறிவிப்பு...!
- ''எங்களுக்கு தனி வரிசை வேண்டும்...'' 'சம உரிமையை நிலைநாட்டிய பெண்கள்...' 'காய்கறிக் கூடையுடன்' களத்தில் இறங்கிய 'மகளிர்...'