'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அ.தி.மு.க அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது, சென்னை போரூர் பகுதியிலுள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கு முன்பே தனக்கு கொரோனா என பரவியது என்று செய்தி தவறானது என அமைச்சர் அன்பழகனே மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதற்கட்டமாக அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா வைரஸிற்கு உண்டான அறிகுறிகள் ஏதும் இல்லை. மேலும் சிடி ஸ்கேன் பரிசோதனையிலும் அனைத்தும் இயல்பாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து லேசான இருமல் ஏற்பட்ட நிலையில், அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வடிவில் கொட்டித்தீர்த்த 'பனிக்கட்டி' மழை... 'அச்சத்தில்' உறைந்த மக்கள்... எங்கேன்னு பாருங்க!
- ‘58 பேருக்கு கொரோனா’.. ஒரே துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பரபரப்பான பரிசோதனை முடிவுகள்!
- 'விலங்குகளுக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றி'... 'இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி'... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் மக்கள் !
- 'சீனாவில் ஆரம்பித்த அடுத்த ஆட்டம்'... 'இந்த நோய் எந்த நேரத்திலும் மனிதர்களை தாக்கலாம்'... உண்மையை போட்டுடைத்த ஆய்வாளர்கள்!
- 5 மாவட்டங்களுக்கு 'அதிகம்' நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு... 'இறைச்சி' கடைகளுக்கு அனுமதி உண்டா?... தளர்வுகள் என்னென்ன?... முழுவிவரம் உள்ளே !
- தமிழகம் முழுவதும் மீண்டும் 'ஊரடங்கு' நீட்டிக்கப்பட்டது... இந்த 'மாவட்டங்களுக்கு' மட்டும் 4 நாட்கள் அதிகம்... விவரம் உள்ளே!
- 'கொரோனா வைரஸுக்கு மருந்து ரெடி!'.. அதிரடியாக அறிவித்த சீனா!.. அடுத்த ஒராண்டுக்கு திட்டம் இது தான்!
- மொத்த தமிழகத்திலும்... 'இந்த' மாவட்டத்துல மட்டும் தான்... கொரோனா ரொம்ப 'ரொம்ப' கம்மி!
- மதுரையில் 290 பேருக்கு ஒரே நாளில் தொற்று!.. கோவையில் 528 ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- "23 வயது இளைஞர் உட்பட 62 பேர் பலி!".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி! சென்னையில் 55,000-ஐ கடந்த பாதிப்பு!