‘யாருமே எதிர்பார்க்கல’!.. டெல்லியில் நேருக்குநேர் சந்தித்த ‘துரைமுருகன்-எல்.முருகன்’.. அப்போ செய்தியாளர் கிண்டலாக கேட்ட கேள்வி.. ‘நச்’ன்னு பதிலளித்த துரைமுருகன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், பாஜக தமிழக தலைவர் எல்.முருகனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் மற்றும் தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணை ஆகியவை குறித்து பேசினார்.
இதற்கிடையே பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையில் டெல்லி சென்றுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இதனை அடுத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்திக்க உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு சாணக்கியபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் வந்துக் கொண்டிருந்தார். அந்த சமயம், அதே தமிழ்நாடு இல்லத்தில் தங்கிருந்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகனும், அமைச்சர் துரைமுருகனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டனர்.
உடனே எல்.முருகன், ‘அய்யா வணக்கம், நல்லா இருக்கீங்களா?’ என துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘உங்களுடைய நண்பர்கள் வந்திருக்காங்க போல?’ என கிண்டலாக அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் நண்பர்கள்தான்’ என பதிலளித்தார். இதனால் அந்த இடத்தில் சற்று கலகலப்பு ஏற்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "தமிழகம் முழுவதும் உள்ள மின் அளவீட்டுக் கருவிகளில் 'புதிய' மாற்றம்"!.. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு!
- '2024 டார்கெட்'!.. "பாஜகவுக்கு எதிராக கூட்டணியில்... 'அவங்க' இல்லாம எப்படி"?.. வியூகம் அமைத்து காய் நகர்த்தும் சரத் பவார்!
- VIDEO: மனிதக்கழிவுகளை அகற்றும் இயந்திரம்!.. சேப்பாக்கம் தொகுதியில் அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!.. பின்னணி என்ன?
- 'என்னது 'தல' தோனியும் டெல்லியில தான் இருக்காரா'!?.. சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர் துறைமுருகன்!.. தீவிரமான ரசிகர்!!
- 'முதல்வர் ஸ்டாலினுடன் டெல்லி சென்ற மனைவி துர்கா ஸ்டாலின்'... 'கவனம் பெற்ற பயணம்'... பின்னணியில் இருக்கும் காரணம்!
- 'கோரிக்கை மனுவோடு இருந்த 2 பவுன் தங்க சங்கிலி'... 'நெகிழ்ந்துபோன முதல்வர் ஸ்டாலின்'... பொறியியல் மாணவிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
- 'அம்மா, முதல்வர் கிட்ட பேசிட்டாங்க'... 'அண்ணே கையெழுத்து போடுறாரு பாருங்க'... 'கான்வாயை நிறுத்திய முதல்வர்'... இணையத்தை கலக்கும் வீடியோ!
- 'மன்னிச்சிருங்க தீதி'...'கண்ணா இது வெறும் ட்ரெய்லர் தான்'... 'இனி தான் மெயின் பிக்சர்'... அதிரடியை ஆரம்பிக்கிறாரா 'மம்தா'?
- திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
- 'எம்.எல்.ஏ.வுக்கு போலீஸ் பாதுகாப்பு'... 'இப்படி ஒரு வறுமையா'?... அரிசி, பருப்பு என அனைத்தையும் வாங்கி கொண்டு வந்த வீரர்கள்!