புதுசா வீடு கட்ட போறீங்களா.. மணல் விற்பனைக்கு.. அரசு வெளியிட்ட சூப்பர் விதிமுறைகள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: பொதுமக்கள், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து ஆற்று மணல் விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், புதிதாக வீடுகட்டுவோருக்கு மணல் விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தாவது:
ஆற்று மணலை எளிதாக பெற வழிமுறைகள்:
பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டடமற்ற இதரபணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஏழைகள் பயன்படும் விதமாக புதிய வழிமுறைகள்:
தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து, வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும், பொதுமக்கள், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்.
சிரமம் இன்றி மணலை எடுத்து செல்ல வழிமுறை:
பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும். தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தற்பொழுது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளில் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம் இவ்வசதியை, தற்போது நடைமுறையிலுள்ள Net Banking, Debit Card மற்றும் UPI ஆகிய Online வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐயா.. என் வீட்டை காணோம்யா! பழையபடி ஊரில் வந்து வாழலாம் என கிளம்பி வந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி
- 'பல பேருக்கு வாழ்நாள் கனவு...' 6 வயதில் 'சொந்தமா' வீடு வாங்கிய சிறுமி...! - கொண்டாடும் உறவினர்கள்...!
- 'மாமரத்த' வெட்டாம இங்க 'வீடு' கட்ட சாத்தியமே இல்லையே...! 'அப்படியா சொல்றீங்க...' - அனைவர் 'வாயையும்' அடைக்க வைத்த நபர்...!
- ஒரே ஒரு 'ஹேர்பின்' வச்சு சொந்தமா ஒரு 'வீட்டையே' வாங்கிட்டாங்க...! - சாதித்துக் காட்டிய 'டிக்டாக்' பெண்...!
- முதல் தடவையா 'நம்ம கட்சி' ஆளுங்களே எனக்கு 'துரோகம்' பண்ணிட்டாங்க...! - 'சட்டசபை தேர்தல்' குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து...!
- 'தமிழ்நாட்டை அவமதிப்பதா'!?.. விடாப்பிடியாக இருக்கும் கர்நாடக அரசு!.. அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா அவசர மீட்டிங்!
- ‘யாருமே எதிர்பார்க்கல’!.. டெல்லியில் நேருக்குநேர் சந்தித்த ‘துரைமுருகன்-எல்.முருகன்’.. அப்போ செய்தியாளர் கிண்டலாக கேட்ட கேள்வி.. ‘நச்’ன்னு பதிலளித்த துரைமுருகன்..!
- 'என்னது 'தல' தோனியும் டெல்லியில தான் இருக்காரா'!?.. சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர் துறைமுருகன்!.. தீவிரமான ரசிகர்!!
- 'காலையில் இருந்தே தொடர்ந்து இழுபறி...' 'ஒருவழியா முடிவுக்கு வந்த காட்பாடி தொகுதி நிலவரம்...' - கடைசியில் அதிரடி ட்விஸ்ட்...!
- 'துரைமுருகன் ஏழு முறை வெற்றிபெற்ற காட்பாடி தொகுதியில்...' - எதிர்பாராத அதிரடி திருப்பம்...!