VIDEO: 'பேரன் மாதிரி நெனச்சதால தான்'... சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்த அமைச்சர்!.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேரன் மாதிரி இருந்ததால் சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல் தரையில் மாட்டிக் கொண்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து, அமைச்சர் அவருடைய செருப்பை அகற்ற சொன்னார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பவே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், சிறுவர்களை எனது பேரன்கள் போல் நினைத்ததால் தான் அவர்களை உதவிக்கு அழைத்தேன்; சிறுவர்களை காலணியை கழற்ற சொன்னதில் எந்த உள் நோக்கமும் இல்லை; பெரியவர்களை அழைத்தால் தவறாகி விடும் என்பதால் சிறுவர்களை அழைத்தேன் என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நேருக்குநேர்’ மோதிய பைக்குகள்.. காரை விட்டு இறங்கி காயமடைந்தவர்கள மீட்ட அமைச்சர்.. குவியும் பாராட்டுகள்..!
- "பத்த வச்சிட்டியே பரட்டை..." அமைச்சர் ஜெயக்குமாரின் "இது எப்படி இருக்கு" கமெண்ட்...
- அமைச்சர் விஜயபாஸ்கரை... ஏர்போர்ட்டில் வழியனுப்பி விட்டு... திரும்பிய தனி உதவியாளருக்கு... நேர்ந்த பரிதாபம்!
- ‘2000 ரூபாய் நோட்டு வாபஸ்?’.. ‘மீண்டும் அறிமுகமாகும் 1000 ரூபாய் நோட்டு?’.. சர்ச்சைகளுக்கு ‘பதிலளித்துள்ள’ மத்திய அமைச்சர்..
- ‘நடிகர் சிவாஜி கணேசன் குறித்து சர்ச்சைப் பேச்சு’.. ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்’..
- ‘தொடரும் மீட்புப் போராட்டம்’.. ‘இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்’.. ‘அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி’..
- 'பிகில்' சிறப்பு காட்சி: 'ஆர்வக் கோளாறால்' இப்படியெல்லாம் பண்றாங்க... அமைச்சர் கடம்பூர் ராஜு!
- ‘பிகில், திகில் எதுவா இருந்தாலும் சட்டம் எல்லோருக்கும் ஒன்னுதான்’.. அமைச்சர் ஜெயக்குமார்..!
- ‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு’..
- 'காந்தி ஜி எப்படி தற்கொலை பண்ணிக்கிட்டார்னு தெரியுமா?'... சர்ச்சையைக் கிளப்பியுள்ள சம்பவம்!