அசாமில் உயிரிழந்த 'தமிழக ராணுவ வீரர்' ... மூன்று நாட்களாகியும் ... உடல் கிடைக்காமல் சோகத்தில் தவிக்கும் 'குடும்பம்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

144 தடை உத்தரவு காரணமாக அசாமில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரு அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் அசாம் ரைபில் பிரிவில் ரைபில் மேனாக கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு நதியா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அசாமில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் குமரேசன் ஈடுபட்டிருந்த போது அவர் மயக்கமடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமரேசன் கடந்த 22 ஆம் தேதியன்று காலை உயிரிழந்து விட்டதாக அசாம் ரைபில் பிரிவிலிருந்து குமரேசன் குடும்பத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விமான சேவை மற்றும் ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் குமரேசனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குமரேசனின் மறைவால் சோகத்தில் உள்ள குடும்பத்தாருக்கு  உடல் கிடைக்காத தாமதமாகி வருவது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று நாட்களாகியும் குமரேசனின் உடல் சொந்த ஊர் வராததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசு தலையிட்டு உடலை உடனடியாக உறவினர்களிடம் மீட்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

144, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்