5 தலைமுறையா இருக்கோம்... எங்க ஊருக்குள்ள பாஜக வரக்கூடாது!".. கலெக்டரை சந்தித்த கிராம மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார். கடந்த ஜனவரி 9ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியின் வீடியோ ஒன்று வெளியானது. அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதம் மாறும்படி தன் பெற்றோரிடம் கூறியதாகவும் தன்னைத் திட்டியும் அதிக வேலை வாங்கியும் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த மாணவி பேசுவது போன்ற காணொளி இடம்பெற்றிருந்தன.

Advertising
>
Advertising

இது தொடர்பாக திருக்காட்டுள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன், விடுதி வார்டனான சகாயமேரி என்பவரையும் கைது செய்தனர்.  பின்னர் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த காணொளியைப் பகிர்ந்தனர். இது தொடர்பாக பாஜக  கட்சி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றையும் நடத்தியது. இதற்கிடையில் மாணவியின் தந்தை, தன் மகளை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறியும், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில், மாணவி மதமாற்றம் தொடர்பாக பேசும் வீடியோவை எடுத்த அரியலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத்தின் செயலாளரான முத்துவேல் என்பவர் வல்லம் டி.எஸ்.பி., அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி., பிருந்தாவிடம் மாணவி பேசும் வீடியோ உள்ள செல்போனை ஒப்பைடத்தார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலையில் மாணவியின் மற்றொரு வீடியோ ஒன்று வெளியானது. இதில்,  தன்னைத் தொடர்ந்து வேலை பார்க்கச் சொல்வதால் படிப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில்தான் விஷமருந்தியதாகச் சொல்கிறார். மாணவி பேசிய வீடியோ விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ள நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மைக்கேல்பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 'எங்கள் ஊரில் 5 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். இங்கு கிறிஸ்தவர்களே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதுநாள் வரை சகோதரத்துவத்தோடு வாழ்கிறோம். எங்கள் குழந்தைகளும் அந்த பள்ளியில் தான் படித்து வருகின்றார்கள். மாணவி தற்கொலையை வைத்து மத ரீதியான கட்சிகளும், அமைப்புகளும் எங்கள் ஊரின் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்கின்றன. பள்ளியில் மத மாற்றம் என்பது நடக்கவில்லை. சிலர் மறைமுகமாக வந்து எங்கள் ஊர் மக்களிடம் குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக பேசுங்கள் என நிர்பந்தம் செய்கின்றனர்.

மாணவி இறப்புக்கு மதமாற்றம் தான் என்று கூறுவது சரியல்ல. விசாரணையில் உண்மை தெரியவரும். பா.ஜ.க குழு உள்ளிட்ட எந்த குழுவும் எங்கள் ஊருக்கு விசாரணைக்கு வரக்கூடாது. பா.ஜ.க-வினரை விசாரிக்க அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்ககூடாது. எங்கள் ஒற்றுமையை சீர்குலைக்க கூடாது. எங்கள் ஊருக்கு பாதுகாப்பு வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.

ARIYALUR, THANJAVUR HOSPITAL, 17 YEAR OLD GIRL, MICHAELPATTI VILLAGE, DINESH PONRAJ ALIVER, THANJAVUR COLLECTOR, PETITION, BJP, VIDEO, BJP PROTEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்