ரகசிய காதலுக்கு தண்டனை!.. ஆடைகளை களைந்து... உடலை சேதப்படுத்தி... உறவினர்கள் வெறியாட்டம்!.. பதபதைக்க வைக்கும் கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பஞ்சாயத்தை மீறி கணவன் இருக்க காதலனுடன் சுற்றிய பெண்ணை பிளேடால் கிழித்து கொடுமைப்படுத்திய உறவினர்கள், கையையும், காலையும் முறித்து தண்டனை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாலமலை கெம்மம் பட்டியை சேர்ந்த தம்பதி சின்னகுள்ளன்-கலா. இவர்களுக்கு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கலாவுக்கு, சின்னசாமி என்பவருடன் முறையற்ற காதல் ஏற்பட்டுள்ளது.
இதை கணவரும், கணவரின் உறவினர்களும் பலமுறை கண்டித்துள்ளனர். அண்மையில் கலாவை அழைத்து ஊர் பஞ்சாயத்தில் வைத்து காதலன் சின்னசாமியை சந்திக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர். ஆனால் கட்டுபடாத கலா, சம்பவத்தன்று காட்டிற்கு விறகு எடுத்து வர செல்வதாக கூறிவிட்டு, சின்னசாமியை சந்தித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதைபார்த்த கணவர் சின்னகுள்ளனின் உறவினர்கள் கலாவை காட்டுப்பகுதியில் வைத்து ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியதோடு உடலில் பல இடங்களில் பிளேடால் கிழித்ததோடு, இடது கையையும், வலது காலையும் முறித்து தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.
அடுத்த நாள் காலை அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கை, மற்றும் கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே கலாவை கொலை செய்ய முயன்றதாக கணவன் சின்னகுள்ளனின் உறவினர்களான செல்லப்பன்,குமார், ரவி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கணவரும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் காதலனுடன் சுற்றிவந்த கலாவுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தாக்கியதாகவும், ஒரு கட்டத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து தூக்கி வீசி விட்டு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கலா மீதான இந்த தாக்குதல் குறித்து கணவர் சின்னகுள்ளனிடம் விசாரணை நடத்த வீட்டிற்குச்சென்ற போலீசார், அங்கு அவர் சாராயம் காய்ச்சுவதை அறிந்து அவரையும் கைது செய்தனர்.
கணவனோ, மனைவியோ கருத்துவேறுபாடு ஏற்பட்டால் சுமூகமாக பிரிந்து செல்வதை விட்டு கொலை வெறி தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டினாலும் தவறான உடல்சார்ந்த தேடல் எப்போதும் உயிருக்கு ஆபத்து என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த கொடூர தாக்குதல் சம்பவம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இவங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லையா!?'.. வேகமாக வந்த லாரி!.. நீதிமன்றம் என்றும் பாராமல்... விநாடிகளில் அரங்கேறிய விபரீதம்!
- 'ஆசையாக சென்ற நண்பர்களுக்கு நடந்த பரிதாபம்'... 'அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்'... தொடர் கதையாகும் சம்பவங்கள்!
- 'தம் அடிச்சா கொளுத்திட்டு செத்துருவேன்... ' 'எதிர்பார்க்கவே இல்ல டக்குன்னு தீ என்னோட...' ஒரே ஒரு சத்தியத்தால் சின்னா பின்னமான குடும்பம்...!
- 'காதலருடன் சேர்ந்து'... ‘16 வயது மகள்’... ‘தாய்க்கு செய்த நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்!
- ‘வயிறு வலிக்காக சிறுமியை’... ‘மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு’... ‘காத்திருந்த பேரதிர்ச்சி’!
- 'கடைசி வரை' உடனிருப்பேன் என்று கூறிய 'கணவரின்...' 'முகத்தைக் கூட' நேரில் பார்க்க முடியாத 'சாவு'... 'இறுதிச்சடங்கு இப்படியா நடக்கணும்...' 'கண்ணீர்விட்டு' அழுத 'மனைவி'...
- ‘எட்டு மாத கர்ப்பிணி மனைவி, கைக்குழந்தை’... ‘700 கிலோ மீட்டர் தூரத்தை’... ‘நெஞ்சை உருக்கும் சோகம்’
- தினமும் வரும் குட் நியூஸ்... கொரோனா இல்லாத மாநகராட்சி... சாதிக்கும் மாவட்டங்கள்!
- ‘நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்ததால்’... ‘உயிருக்கே வினையாகிப் போன விபரீதம்’... ‘2 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த உண்மை’!
- அம்மா உனக்கு 'ரொம்ப' கஷ்டத்தை குடுத்துட்டேன்... புதுப்பெண் தற்கொலையில் 'உருக்கமான' கடிதம் சிக்கியது!